'அடங்கப்பா...இது, உலக நடிப்புடா சாமி!'

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
அலமாரியை நோண்டிக் கொண்டிருந்த சித்ராவை பார்த்து, ''என்னக்கா, தேடிக்கிட்டு இருக்கீங்க,'' என, பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா.''என்னப்பா, இப்படி கேட்டுட்டே. எலக்சனுக்கு ஓட்டுப்போட வேண்டாமா. வாக்காளர் அட்டையை தேடிட்டு இருக்கேன். முதல்ஆளா, ஓட்டுப்பதிவு செஞ்சிட்டு, சிட்டி முழுக்க 'ரவுண்ட்ஸ்' போகனும்,''''ரெண்டு கட்சிக்காரங்களும் கரன்சியை அள்ளி வீசியிருக்காங்களே.
 'அடங்கப்பா...இது, உலக நடிப்புடா சாமி!'

அலமாரியை நோண்டிக் கொண்டிருந்த சித்ராவை பார்த்து, ''என்னக்கா, தேடிக்கிட்டு இருக்கீங்க,'' என, பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா.''என்னப்பா, இப்படி கேட்டுட்டே. எலக்சனுக்கு ஓட்டுப்போட வேண்டாமா. வாக்காளர் அட்டையை தேடிட்டு இருக்கேன். முதல்ஆளா, ஓட்டுப்பதிவு செஞ்சிட்டு, சிட்டி முழுக்க 'ரவுண்ட்ஸ்' போகனும்,''''ரெண்டு கட்சிக்காரங்களும் கரன்சியை அள்ளி வீசியிருக்காங்களே. பறக்கும் படை அதிகாரிகளெல்லாம், என்ன செஞ்சுக்கிட்டு இருக்காங்க,''''எலக்சன் கமிஷன் அதிகாரிகளால, ஒன்னுமே செய்ய முடியலப்பா. ஆளுங்கட்சி தரப்புல ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க. ஓட்டுப்போடுவாங்கன்னு தெரிஞ்சா பாகுபாடு காட்டாம, அள்ளிக் கொடுக்க மேலிடத்து உத்தரவாம். தண்ணியா செலவழிச்சிருக்காங்க. சில இடங்கள்ல கட்சி நிர்வாகிங்க பணத்தை சுருட்டிட்டாங்களாம்,''''அப்படியா,''''புதுசா சேர்ந்த ஓட்டெல்லாம், துணை பட்டியலில் இருக்கும். அதை கணக்குல சேர்க்காம, லிஸ்ட்டுல பெயர் இல்லைன்னு சொல்லி, பணம் கொடுக்காம, கட்சி நிர்வாகிகளே ஒதுக்கிட்டாங்களாம். ஆனா, வேட்பாளரிடம் இருந்து பட்டியலில் எவ்வளவு வாக்காளர்கள் இருக்காங்களோ, அதை கணக்கு போட்டு கறந்துட்டாங்களாம்,''''தி.மு.க., தரப்பிலும் பணம் கொடுத்ததா சொன்னாங்களே,''''கட்சியில இருந்து, ஒவ்வொரு வேட்பாளருக்கும் 5 'சி' கொடுத்ததா சொல்றாங்க. முக்கியஸ்தர்கள் சிலருக்கு, 10 'சி' கொடுத்திருக்காங்களாம். சிலர், நாங்களே செலவழிச்சிருக்கிறோம்னு சொல்லிட்டாங்களாம். எப்படியும் ஜெயிச்சிரும்வோம்ங்கிற நம்பிக்கையில, தி.மு.க, தரப்புல, ஒரு ஓட்டுக்கு, 500 ரூபாய் கொடுத்திருக்கிறாங்க,''''சில வேட்பாளர்கள், மேலிடம் கொடுத்த பணத்தையும் அமுக்கிட்டாங்களாமே,''''ஆமாப்பா, உண்மைதான்! இரு மாவட்டத்திலும் பரந்து விரிந்திருக்கிற தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி இருக்காங்க. இருந்தாலும், நிதியுதவி செஞ்சிருக்காங்க. ஓட்டுக்கு பணம் கொடுக்கவும், கட்சிக்காரங்களுக்கும் சேர்த்து, 4 'சி' செலவழிச்சிருக்காரு; பலா சுளை மாதிரி, 1 'சி'யை, 'அலேக்'கா ஒதுக்கிட்டாராம். இதை கேள்விப்பட்டு கொந்தளிச்ச உடன்பிறப்புகள், புகார் மழை வாசிச்சிருக்காங்க,''''தெற்கு தொகுதியில, கதர் சட்டைக்காரங்களை கதற விட்டுட்டாங்களே,'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.''அந்த தொகுதியில கமல் கட்சிக்கும், தாமரை கட்சிக்கும் நேரடி போட்டின்னு, மக்கள் மத்தியில் பேச்சு பலமா இருக்கறதுனால, கதர் சட்டைக்காரர் களத்துல காணாம போயிட்டாரு. அவரும், ஆதரவாளர்களை அழைச்சிட்டு, ஆங்காங்கே பிரசாரம் செய்யத்தான் செஞ்சாரு. கூட்டணி கட்சியா இருந்தாலும் உடன்பிறப்புக கண்டுக்காம, மத்த தொகுதிக்கு தாவிட்டாங்களாம்,''''சிங்காநல்லுார் தொகுதியில, கண்காணிக்கிறதுக்கு தலைமையில இருந்து ஆள் நியமிச்சிருந்தாங்களாமே,''''யெஸ், மித்து! நீ சொல்றது கரெக்ட்டுதான். ரெண்டு திராவிட கட்சிக்காரங்களும் போட்டி போட்டு பட்டுவாடா செஞ்சாங்க. இத கண்காணிக்க, வெளிமாவட்ட கட்சிக்காரங்களை, தலைமையில இருந்து அனுப்பியிருந்தாங்களாம்,''''ஆளுகேத்த மாதிரி பணம் கொடுத்துட்டு, ரெண்டு கட்சிக்காரங்களும். ஆட்டைய போட்டிருக்காங்க. வெளியூர்ல வேலையில இருக்கறவங்க பெயரை சொல்லியும், 'ஸ்வாகா' பண்ணியிருக்காங்க. பண நாயகத்தை ஒழிக்க முடியாம, இந்த விஷயத்துல எலக்சன் கமிஷன் தோத்துப் போயிடுச்சு,''''அதனாலதான், கமல் ஆவேசப்பட்டு, மொபைல் போனில் போட்டோ எடுத்து அனுப்புங்கன்னு பேசுனாரா,''''ஆமாப்பா, அவருக்கு தகவல் கெடைச்சதும் ரொம்பவே நொந்து போயிட்டாராம். அந்த ஆதங்கத்துலதான், அப்படி பேசியிருக்காரு,''''அதெல்லாம் இருக்கட்டும், காசு கொடுக்கற கட்சிக்குதான் மக்கள் ஓட்டுப்போடுவாங்களா, என்ன,''''நீ கேட்குறது கரெக்ட் மித்து! நம்மூர் மக்கள் ரொம்பவே தெளிவா இருப்பாங்க. 2011ல் மாற்றத்துக்கான விதையை துாவுனதே, நம்மூர் ஜனங்க தான்! அதே மாதிரி, இப்பவும் எழுச்சி வரும்னு ஆபீசர்ஸ் மத்தியில் பேசிக்கிறாங்க. ஜனங்க மத்தியில் எந்த அலையும் வீசல; ரெண்டு நாளா, கரன்சி மழைதான் கொட்டுது. கணிக்க முடியாத தேர்தலா இருக்கு. முடிவு எப்படி வேணும்னாலும் மாறும்னு, ஆபீசர்ஸ் மத்தியில் சொல்றாங்க,''''களம் 'டப்'பா இருக்கறதுனால, பூ கட்சிக்காரங்களும் கரன்சியை அள்ளி வீசுனாங்களாமே,''''அதுவா, ரெண்டு விஷயத்துல, 'ரூட்' தப்பா போனதுனால, கடைசி நேரத்துல இப்படி ஆயிடுச்சேன்னு 'அப்செட்' ஆனாங்க. இனி, ஆளுங்கட்சி 'சப்போர்ட்' இல்லாம ஜெயிக்க முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்டாங்க. அதனால, தனித்தனியா பட்டுவாடா பண்ணியிருக்காங்க. ஓட்டுக்கு இவ்வளவுன்னு கணக்கு போட்டு, நிர்வாகிகளிடம் கொடுத்திருக்காங்க. சில நிர்வாகிகள், பல ஆயிரத்தை பதுக்கிட்டாங்களாம்,''''பூவை இலை தாங்கிப் பிடிக்குமா; இல்லேன்னா, எம்.பி., எலக்சன்ல நடந்த மாதிரி ஆயிடுமோன்னு, பயந்துக்கிட்டு இருக்காங்க,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.''போலீஸ்காரங்க மேல, உடன்பிறப்புகள் கடுங்கோபத்துல இருக்காங்களாமே, என்னாச்சு,''காபி கோப்பையை நீட்டிய சித்ரா, ''அதுவா, வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இறுதி பிரசாரம் மேற்கொள்ள தி.மு.க.,வினர் அனுமதி வாங்கியிருந்தாங்க. மருதமலை அடிவார பகுதியில அ.தி.மு.க.,வினருக்கு அனுமதி வழங்கியிருந்தாங்க. ஆனா, வடவள்ளியில் ரத்தத்தின் ரத்தங்கள் அதிகமா திரண்டாங்க,''''உடன்பிறப்புகளும் அதேயிடத்துல ஒன்று சேர்ந்ததால, பரபரப்பான சூழல் ஏற்பட்டுச்சு; ரெண்டு தரப்புக்குள்ள அடிதடி, மோதல் ஏற்படும்னு நெனைச்சாங்க. இரு தரப்பையும் போலீசார் சமாதானம் செஞ்சாங்க. கொஞ்சம் தள்ளி, வேறொரு இடத்துல பிரசாரத்தை நிறைவு செய்ய, தி.மு.க.,காரங்களிடம் சொல்லியிருக்காங்க,''''அதைக்கேட்டு கொந்தளிச்ச உடன்பிறப்புகள், 'அனுமதி எங்களுக்கு கொடுத்துட்டு, அவுங்களுக்கு சாதகமா பேசுகிறீர்களா. இது, கொஞ்சம் கூட நியாயம் இல்லை. அடுத்த ஆட்சி எங்களதுதான். அப்ப, பார்த்துக் கொள்கிறோம்' என, மிரட்டுற தொணியில எகிறியிருக்காங்க. போலீஸ்காரங்க, கையை பிசைஞ்சிட்டு இருக்காங்க. நல்லவேளையா, பிரச்னையில்லாம, அமைதியா, பிரசாரம் முடிஞ்சிடுச்சு,''காபியை உறிஞ்சிய மித்ரா, ''உளவு பார்க்குற போலீஸ்காரங்கள மாத்துனா மாதிரி, 'கருப்பு ஆடு'களை களையெடுக்கணும்னு நேர்மையான அதிகாரிங்க நினைக்கிறாங்களாமே,'' என, கேட்டாள்.''ஆமாப்பா, லஞ்சம், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதா, ஏழு ஸ்டேஷன் உளவுத்துறை போலீசாரை, புதுசா வந்திருக்கிற போலீஸ் கமிஷனர், ஆயுதப்படைக்கு மாத்துனாரு. அதே மாதிரி, நல்லவங்க மாதிரி நடிச்சு, கல்லா கட்டுறவங்களையும் கண்டுபிடிச்சு, களையெடுக்கணும்னு சொல்றாங்க,'' என்ற சித்ரா, ''சிட்டி ரவுண்ட்ஸ் போகப் போறேன், வர்றீயா,'' என, கேட்டாள்.''நா, இல்லாம, தனியா போகப் போறீங்களா, இதோ வந்துட்டேன்,'' என்றபடி, ஸ்கூட்டரில் தொற்றிக் கொண்ட மித்ரா, ''தொண்டாமுத்துார்ல, பட்டுவாடா முடிஞ்சிடுச்சாமே,'' என, நோண்டினாள்.''முதல்முறை வாக்காளர்கள், நடுநிலை வாக்காளர்கள், கட்சிக்காரங்க ஓட்டுக்கு, தலா, 1,000 ரூபாய் கொடுத்திருக்காங்க. பலம் குறைந்த ஏரியாவுல, 2,500 ரூபாய் வரை போயிருக்கு. சம்பந்தப்பட்டவங்களுக்கு கரன்சி போகாம, சுருட்டிடக் கூடாதுன்னு, முக்கியஸ்தர்கள் மூலம், பட்டுவாடா செஞ்சிருக்காங்க,'' என்றபடி, செஞ்சிலுவை சங்க வளாகத்தில் உள்ள பேக்கரியில் ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் சித்ரா.''ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்குல செலவு செய்றது, அப்பட்டமா தெரியுது! ஆனா, ரூ.30.80 லட்சம்தான் செலவு செய்யணும்னு, எலக்சன் கமிஷன் ரூல்ஸ் வச்சிருக்கே. இதெல்லாம் அநியாயமாத் தெரியலை,'' என, கேட்டாள்.''அக்கா, இதெல்லாம் பரவாயில்லை. வேட்பாளர் தரப்புல, செலவு கணக்கு கொடுப்பாங்க, பாரு. அதை படிச்சா, காமெடியா இருக்கும். அதுவும் உண்மைன்னு நம்பி, எலக்சன் கமிஷன் இணைய தளத்துல வெளியிடுவாங்க. இதையெல்லாம் பார்த்தா... நடிகர் கவுண்டமணியின், 'அடங்கப்பா...இது, உலக நடிப்புடா சாமி!' என்ற காமெடி டயலாக்தான் ஞாபகத்துக்குவருது,'' என்றபடி, ரோஸ் மில்க் ஆர்டர் கொடுத்தாள், மித்ரா.சற்று நேரத்தில் டேபிளுக்கு வந்த, ரோஸ் மில்க்கை பருகிய படி, ''பெரிய கட்சி பேனரில் போட்டியிடுற ஒரு வேட்பாளர், உத்தேசமா எவ்ளோ செலவழிச்சிருப்பாரு,'' என, கேட்டாள் சித்ரா.''ஓட்டுக்கு காசு கொடுக்குறது; பிரசாரத்துக்கு தொண்டர்களை கூட்டிட்டு போறது; பூத் செலவுக்கு பணம் கொடுக்குறது; ஓட்டுச்சாவடியில் வேலை பார்க்குற ஏஜன்ட்டுகளுக்கு கொடுக்கறது; ஓட்டு எண்ணிக்கை நடக்கறப்போ, வேலை பார்க்குற ஏஜன்ட்டுகளுக்குன்னு தனித்தனியா பட்டுவாடா செய்யணும். குறைஞ்ச பட்சம் ரூ.30 கோடி செலவாகும்னு கட்சிக்காரங்க சொல்றாங்க,''''அப்படியா,'' என, வாயை பிளந்த சித்ரா, கலெக்டர் ஆபீஸ் செல்ல, ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X