கோவை:தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களை நேற்று, வீடு வீடாக சந்தித்து தங்கள் கட்சிக்கு ஓட்டுப் போட வலியுறுத்தியதோடு கரன்சிகளையும் வினியோகித்தனர்.தேர்தல் பிரசாரம் செய்வதற்கான காலக்கெடு, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியுடன் நிறைவடைந்தது. அதன் பிறகு, பொதுக்கூட்டங்களோ, பிரசாரங்களோ நடத்தக்கூடாது. வீடு வீடாக பிரசாரம் செய்யவும், தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.அதையும் மீறி, கோவை நகர் மற்றும் நகரை ஒட்டிய கிராமங்களில், அரசியல் கட்சியினர் நேற்று முழுக்க மக்களை வீடுகள், பணிபுரியும் இடங்களில் சந்தித்து ஓட்டுக் கேட்டனர்.அரசியல் கட்சிகளில் உள்ளூர், கிளை, வார்டு அளவில் பதவிகளில் உள்ளவர்கள், தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுடன் நேரடி அறிமுகத்தில் உள்ளனர். இந்த நெருக்கத்தை பயன்படுத்தி, தங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட வலியுறுத்தினர்.இந்த ஓட்டு சேகரிப்பின் போது, பல இடங்களில் ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவும் நடந்தது. இப் பணப்பட்டுவாடா வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது, மே 2ம் தேதி தேர்தல் முடிவுகளின் போது, தெரிய வரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE