பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட ஆனைகட்டி, பாலமலை உள்ளிட்ட நக்சல் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் இடங்களில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கவுண்டம்பாளையம் தொகுதியில், 626 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. இங்கு நாலு லட்சத்து, 65 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட தூமனூர் பகுதியில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இதேபோல ஆனைகட்டி, வீரபாண்டி உள்ளிட்ட தமிழக, கேரள எல்லையோரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் நக்சல் நடமாட்டம் உள்ளதால், அதிரடி போலீசார் மற்றும் சிறப்பு காவலர்கள் கூடுதல் எண்ணிக்கையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மலை கிராமங்களில், வனவிலங்குகள் ஓட்டுச்சாவடி அருகே வருவதை தடுக்க, வனத்துறையினர் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை குஞ்சூர்பதி மலை கிராமத்தில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இங்கு பெரும்பதி, பெருக்கைப்பதி, மாங்குழி, பசுமணி, பசுமணி புதூர் உள்ளிட்ட மலை கிராமங்களைச் சேர்ந்த, பழங்குடியின மக்கள் வாக்களிக்க உள்ளனர்.ஓட்டுச்சாவடிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும், போலீசார் வேனில் சிறப்பு ரோந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இது, பெருந்தொற்று கால தேர்தல் என்பதால், முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும், சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE