அரசியல் செய்தி

தமிழ்நாடு

'புதிய ஆளுமையை மக்கள் தேடுகின்றனர்'

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை : ஓட்டுப்பதிவு நிறைவடையும் வரை, மிக கவனமாக கடமையாற்றும்படி, கட்சியினருக்கு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வேண்டு கோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை:ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழக நலன்களை பாதுகாக்கும் வல்லமை உடைய, ஒரு ஆளுமையை, மக்கள் தேடுவதை கண்டேன். தமிழக உரிமைகள் பறிபோவது குறித்தோ, தமிழர் நலன்கள் பாதிக்கப்படுவது குறித்தோ, கவலைப்படாத துரோகிகளையும், ௧௦

சென்னை : ஓட்டுப்பதிவு நிறைவடையும் வரை, மிக கவனமாக கடமையாற்றும்படி, கட்சியினருக்கு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழக நலன்களை பாதுகாக்கும் வல்லமை உடைய, ஒரு ஆளுமையை, மக்கள் தேடுவதை கண்டேன். தமிழக உரிமைகள் பறிபோவது குறித்தோ, தமிழர் நலன்கள் பாதிக்கப்படுவது குறித்தோ, கவலைப்படாத துரோகிகளையும், ௧௦ ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்ட தீய சக்திகளையும், அடுத்த தலைமுறைக்கான ஆளுமையாக, மக்கள் நினைக்கவில்லை.எதிர்கால தமிழகத்துக்கான ஆளுமையாக, நம் இயக்கத்தை, மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த தேர்தலில், பிரதான கட்சிகள் பண பலத்தை மட்டுமே நம்பி, களம் காணும் போது, நம் கட்சிதான் மக்கள் மீது நம்பிக்கை வைத்து, களத்தை சந்தித்தது.

பண பலத்தை கொட்டி யும், ஆதரவு பெருகவில்லை என்ற, ஏமாற்றத்தில் இருக்கும், துரோக சக்திகளும், தீய சக்திகளும், ஓட்டுப்பதிவு நாளில், சில சில்மிஷங்களை செய்ய வாய்ப்புள்ளது. அதுபோன்ற தவறுகள் நடக்க முடியாதபடி, நாளை ஓட்டுச்சாவடியில், தொண்டர்கள் மிக கவனமாக இருந்து, விழிப்போடும், விதி முறைகளுக்கு உட்பட்டும், கடமையாற்ற வேண்டும். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X