மேட்டுப்பாளையம்,:மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், வேளாங்கண்ணி சர்ச் அருகே பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி, டி.என்.40 டி 3444 என்ற பதிவு எண் கொண்ட, வெள்ளை நிற கார் வேகமாக வந்தது.காரை, பறக்கும் படை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் காரை ஓட்டி வந்த டிரைவர், காரை லாக் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். காரை பறக்கும்படையினர், கிரேன் வாயிலாக, தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன், காரமடை கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில், காரின் கதவை உடைத்து, உள்ளே பணம் ஏதேனும் உள்ளதா, என ஆய்வு செய்ய உள்ளனர். காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE