அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ரபேல் போர் விமான விவகாரம் ; கே.எஸ்.அழகிரி

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : 'ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து, பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். அவரது அறிக்கை: ரபேல் போர் விமான கொள்முதல் குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டிற்கு, ஆதாரம் வெளியாகி உள்ளது. இடைத்தரகருக்கு, லஞ்சமாக பணம் கைமாறி இருக்கிறது. இதுகுறித்து, பாரபட்சமற்ற சுயேச்சையான
 'ரபேல் போர் விமான விவகாரம் ; கே.எஸ்.அழகிரி

சென்னை : 'ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து, பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: ரபேல் போர் விமான கொள்முதல் குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டிற்கு, ஆதாரம் வெளியாகி உள்ளது. இடைத்தரகருக்கு, லஞ்சமாக பணம் கைமாறி இருக்கிறது. இதுகுறித்து, பாரபட்சமற்ற சுயேச்சையான விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில், இது பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்டது என்பதால், அதிக கவனத்தை செலுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பு துறை கொள்முதலில், இடைத்தரகருக்கு, லஞ்சம் கொடுத்த, 'டசால்ட்' நிறுவனத்தை தடை செய்வதோடு, அந்த நிறுவனத்தின் மீது, வழக்கு தொடர வேண்டும்.

மத்திய அரசு, டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கோர வேண்டும். பா.ஜ., ஆட்சியில், ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. எதற்கும் பதில் அளிக்காமல் இருப்பதை போல, இதையும் தட்டிக் கழிக்காமல், பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
06-ஏப்-202110:49:04 IST Report Abuse
thamodaran chinnasamy இதையெல்லாம் சொல்லுவதற்கு நீங்கள்தான் வெட்கப்படவேண்டும் , எந்த நேரத்தில் என்ன பேசுவது என்றுகூட தெரியாமல் உளறுகிறார் .இதில் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வேறு. நல்ல விளங்கிடும்ம்ம்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஏப்-202122:43:55 IST Report Abuse
தமிழவேல் அப்போ, எப்போ பேசணும் ?...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
06-ஏப்-202110:28:32 IST Report Abuse
RajanRajan இந்த மாதிரி தான் அந்நிய கைக்கூலிகளுக்கு சோரம் போயியே இந்த காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. முற்றிலும் அழிந்து நாடு சுபீட்ச்சம் பெற வாழ்த்துக்கள் அண்ணா.
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
06-ஏப்-202108:04:42 IST Report Abuse
Bharathi உள்ளூர் ஊழல் கட்சியே உன்னை மதிக்கலைனு அழுத. அவ்ளோதான் உன் ஒர்த். உன் லெவெலுக்கு நீங்கள் முனிசிபாலிடி குமாஸ்தா கிட்ட தான் கேள்வி கேட்கணும்.
Rate this:
sakthivel, dubai - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஏப்-202118:38:09 IST Report Abuse
sakthivel, dubaiசூப்பர் பா அருமையான பதிலடி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X