அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அ.தி.மு.க., தலைமையில் தமிழகம் வீர நடைபோடும்' ; த.மா.கா., தலைவர் வாசன்

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : 'வெற்றி நடைபோடும் தமிழகம், தேர்தல் வெற்றிக்கு பின், அ.தி.மு.க., தலைமையில் தொடர்ந்து வீர நடைபோடும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார். அவரது அறிக்கை:கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், முன்மாதிரி மாநிலமாக, தமிழக அரசு செயல்படுகிறது. அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரம் உயர, திட்டங்களையும், சலுகைகளையும் கொடுத்து செயல்படுகிறது. எனவே, அ.தி.மு.க., தேர்தல்

சென்னை : 'வெற்றி நடைபோடும் தமிழகம், தேர்தல் வெற்றிக்கு பின், அ.தி.மு.க., தலைமையில் தொடர்ந்து வீர நடைபோடும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், முன்மாதிரி மாநிலமாக, தமிழக அரசு செயல்படுகிறது. அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரம் உயர, திட்டங்களையும், சலுகைகளையும் கொடுத்து செயல்படுகிறது. எனவே, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை பொது நலம் கருதி இருப்பதால், மக்கள் நம்புகின்றனர். தி.மு.க., தேர்தல் அறிக்கை சுயநலம் கலந்து இருப்பதால், மக்கள் அதை ஏற்க தயாராக இல்லை. இத்தேர்தலில் வளர்ச்சி திட்டங்கள் தொடர வேண்டும். மக்கள் வாழ்வு செழிக்க வேண்டும். அடக்கமான, ஆரவாரமற்ற, ஆளுமை மிக்க ஆட்சி மீண்டும் தொடர வேண்டும்.

அதன் அடிப்படையில், வெற்றி நடைபோடும் தமிழகம், தேர்தல் வெற்றிக்கு பின், அ.தி.மு.க., தலைமையில் தொடர்ந்து வீர நடைபோடும். வாக்காளர்கள் அனைவரும், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை தவறாமல் கடைப் பிடித்து, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, வளமான தமிழகமும், வலிமையான பாரதமும் உருவாக, அவர்கள் சார்ந்த சின்னத்தில், உறுதியாக, தவறாமல் ஓட்டு அளிக்க வேண்டும். இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elangovan - Salem Attur,இந்தியா
06-ஏப்-202110:11:15 IST Report Abuse
Elangovan நீயெல்லாம் ஒரு ஆளு. ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X