பொது செய்தி

தமிழ்நாடு

நாங்களே நொந்து போய் கிடக்குறோம்: இதுல ஓட்டு வேற போடணுமாக்கும்!

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:ஓட்டு போடுவதற்கு பெரும்பாலான கொரோனா நோயாளிகள் விருப்பமில்லை என கூறியுள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.கோவையில், இன்று ஒரே நாளில் 376 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், அரசு, இ.எஸ்.ஐ.,தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 2,701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3,284 பேருக்கு கொரோனா

கோவை:ஓட்டு போடுவதற்கு பெரும்பாலான கொரோனா நோயாளிகள் விருப்பமில்லை என கூறியுள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.கோவையில், இன்று ஒரே நாளில் 376 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், அரசு, இ.எஸ்.ஐ.,தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 2,701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3,284 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொரோனா பாதித்தவர்களில், 98 சதவீதம் பேர், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதால், இவர்களின் வாக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.ஓட்டுப்பதிவு நாளான இன்று, கடைசி ஒரு மணி நேரம் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, கவச உடை அளிக்கப்படுகிறது. ஆனால், ஓட்டுப்போடுவதற்கு பெரும்பாலான கொரோனா நோயாளிகள் விரும்பவில்லை என கூறுவதாக, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் ரவிந்திரன் கூறுகையில், ''இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் உள்ள 530 படுக்கைகளில், 527 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், ஓட்டு போடவே போகக்கூடாது. இது, நோய் தொற்றை பரப்புவது போல் ஆகி விடும்.வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விரும்பினால், முழு கவச உடை (பி.பி.இ.,கிட்) அணிந்து ஓட்டு போட செல்லலாம்,'' என்றார்.சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்போதைய சூழலில், 70 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் ஓட்டு போடுவதற்கு விருப்பமா என கேட்டோம்.பலரும் 'யோசிச்சு சொல்றோம்' என்றுதான் சொல்கின்றனர். கொரோனா வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் ஓட்டு போட செல்லும் போது, தொற்று ஏற்படுவதை தவிர்க்க முக கவசம் அணிந்து, கிருமி நாசினி எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக, தனி நபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஏப்-202111:26:21 IST Report Abuse
Ram Pollachi விரைவில் குணமடைய அந்த தன்வந்திரி அருள் புரியட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X