பொது செய்தி

இந்தியா

நக்சல் பிரச்னைக்கு முடிவு

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜக்தால்புர் : ''நக்சல் பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், இனி நடவடிக்கைகள் தீவிரமாகும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியுடன் குறிப்பிட்டார். சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில், நக்சல் பிரச்னை அதிகமாக உள்ளது. சுக்மா மற்றும் பீஜபுர் மாவட்ட எல்லையில் உள்ள வனப் பகுதியில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக

ஜக்தால்புர் : ''நக்சல் பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், இனி நடவடிக்கைகள் தீவிரமாகும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியுடன் குறிப்பிட்டார்.

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில், நக்சல் பிரச்னை அதிகமாக உள்ளது. சுக்மா மற்றும் பீஜபுர் மாவட்ட எல்லையில் உள்ள வனப் பகுதியில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து, சி.பி.ஆர்.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாநில போலீசார் இணைந்து, தேடுதல் வேட்டையில் சமீபத்தில் ஈடுபட்டனர்.அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், 22 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சண்டை நடந்த பகுதிகளில் உள்ள நிலவரம் குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார்.இந்த ஆய்வு கூட்டத்தில், முதல்வர் பூபேஷ் பாஹெல், மாநில போலீஸ் மற்றும், சி.ஆர்.பி.எப்., உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் அமித் ஷா கூறியதாவது: இந்த வீரர்களின் உயிர்த் தியாகம் வீணாகாது. இந்த துரதிருஷ்டவசமான சம்பவம், நக்சல்களுக்கு எதிரான நம் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வேகத்தை அளித்துள்ளது. ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பாதுகாப்புப் படை உயரதிகாரிகளும் இதை தெரிவித்தனர்.

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், உறுதியான முடிவை எட்டும் வகையில், நம் நடவடிக்கைகளை தீவிரபடுத்த உள்ளோம்.நாட்டின் மக்கள் சார்பிலும், மத்திய அரசின் சார்பிலும், பிரதமர் நரேந்திர மோடி சார்பிலும், உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளேன். நக்சல்களுக்கு எதிராக, கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதனால் ஏற்பட்ட விரக்தியில் இந்த தாக்குதலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாநில அரசுடன் இணைந்து, நக்சல் பிரச்னைக்கு முழுமையான தீர்வை காண்போம். இவ்வாறு அவர் கூறினார்.பசகுடாவில் உள்ள, சி.ஆர்.பி.எப்., முகாமுக்கு சென்று வீரர்களை சந்தித்து, அமித் ஷா பேசினார். நக்சல்களுடனான சண்டையில் காயமடைந்த வீரர்களையும் சந்தித்தார்.மாயமான வீரர் எங்கே?நக்சல்களுடான சண்டையின்போது, சி.ஆர்.பி.எப்., படையைச் சேர்ந்த, ஒரு வீரர் காணாமல் போனதாக தெரிகிறது. அந்த வீரர், நக்சல்கள் பிடியில் உள்ளதாக, உள்ளூர் பத்திரிகையாளர்கள் சிலருக்கு, தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீரர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் விடுவிப்பதாகவும் தொலைபேசியில் பேசியவர்கள் கூறியதாக, பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், நக்சல் பிடியில் உள்ள வீரரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர், மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, அந்த வீரரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.ராகுல் குற்றச்சாட்டுநக்சல் தாக்குதல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளதாவது: 'உளவுத் தகவல் தோல்வி ஏதும் இல்லை' என, சி.ஆர்.பி.எப்., இயக்குனர் குல்தீப் சிங் கூறியுள்ளார்.

மேலும், 22 நக்சல்களும் கொல்லப்பட்டதாக கூறியுள்ளார்.ஒரு நக்சலை கொல்ல, ஒரு வீரர் பலி என்பதை ஏற்க முடியாது. விவேகமாக திட்டமிடாமல், முறையாக செயல்படுத்தாத தேடுதல் வேட்டையாகவே, இதை கருத வேண்டும். நம் வீரர்களை ஒரு ஆயுதமாக, ஒரு பொருளாகவே பார்க்கிறீர்கள். அவர்களது உயிருக்கு மதிப்பில்லையா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
06-ஏப்-202116:03:40 IST Report Abuse
a natanasabapathy பாக்கிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து சுர்ஜிக்கல் Strike நடத்திய நம்மால் நமது நாட்டுக்குள் உள்ள Naxal க ல ஒழிக்க முடியவில்லை என்பது வேதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X