கோவை:ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லுாரியின், 16வது பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் தீபானந்தன் வரவேற்றார். எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்து பேசுகையில், ''பல் மருத்துவ கல்வியுடன் மாணவ, மாணவியர் பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நற்கல்வியும், பயமறியா முயற்சிகளுடன், நல்லொழுக்கத்தை கடைபிடித்து வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை துணைவேந்தர் விஜயராகவன், இளங்கலை படிப்பு மாணவர்கள், 87 பேருக்கும், முதுகலை மாணவர்கள், 10 பேருக்கும் பட்ட சான்றிதழ்கள் வழங்கினார். இளங்கலையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு, பத்து தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE