அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., புகார் ஸ்ரீ 'டிவி' மறுப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை : ஸ்ரீ 'டிவி'யில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள் அனைத்தும், ஆதாரங்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக, அந்த 'டிவி' நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்ரீ 'டிவி' நிர்வாகத்தைச் சேர்ந்த ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: எங்கள், ஸ்ரீ 'டிவி' மீது நடவடிக்கை கோரி, தேர்தல் கமிஷனில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, புகார் கொடுத்துள்ளார். அதில், தி.மு.க.,வுக்கு எதிராக,

சென்னை : ஸ்ரீ 'டிவி'யில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள் அனைத்தும், ஆதாரங்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக, அந்த 'டிவி' நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீ 'டிவி' நிர்வாகத்தைச் சேர்ந்த ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: எங்கள், ஸ்ரீ 'டிவி' மீது நடவடிக்கை கோரி, தேர்தல் கமிஷனில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, புகார் கொடுத்துள்ளார். அதில், தி.மு.க.,வுக்கு எதிராக, ஆதாரப்பூர்வமற்ற வீடியோக்களை வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.எங்கள், 'டிவி'யில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள் அனைத்தும், ஆதாரங்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டன. தி.மு.க.,வால் நடத்தப்பட்ட குற்றங்களை, ஆதாரங்களுடன் கூறியதற்காக, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அதை செய்த தி.மு.க., மீது, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்குமா என்பதே எங்கள் கேள்வி.எங்கள் 'டிவி' மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தலாம் என்ற செய்தி வருகிறது.

தாக்குதல் நடத்தினாலும், சொன்ன விஷயங்களில் இருந்து, எங்கள் 'டிவி' பின்வாங்காது. எங்கள் 'டிவி'யின் தாரக மந்திரமே உண்மை நின்றிட வேண்டும் என்பது தான். ஆதலால், தி.மு.க.,வின் வன்முறைக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாது; அனைத்து எதிர்ப்புகளையும் மீறி போராடும்; வெற்றி பெறும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X