'ரபேல்' விமான ஒப்பந்தத்தில்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுடில்லி : 'ரபேல்' ரக போர் விமானங்களை தயாரிக்கும், ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த, 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த இடைத் தரகர் ஒருவருக்கு, 4.31 கோடி ரூபாய் தந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சிடம் இருந்து நம் விமானப் படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம், 2016ல் கையெழுத்தானது. இதில் ஒப்பந்தத்தில்

புதுடில்லி : 'ரபேல்' ரக போர் விமானங்களை தயாரிக்கும், ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த, 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த இடைத் தரகர் ஒருவருக்கு, 4.31 கோடி ரூபாய் தந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரான்சிடம் இருந்து நம் விமானப் படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம், 2016ல் கையெழுத்தானது. இதில் ஒப்பந்தத்தில் மோசடி நடந்ததாக, காங்., முன்னாள் தலைவர் ராகுல், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'எந்த முறைகேடும் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை' என, தீர்ப்பு அளித்தது.இந்நிலையில், டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின், 2017ம் ஆண்டுக்கான கணக்குகளை, அந்த நாட்டின் லஞ்ச தடுப்பு பிரிவு ஆய்வு செய்துள்ளது.

அதில், 'வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பரிசு' என, 4.31 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.டசால்ட் நிறுவனத்தின் துணை ஒப்பந்த நிறுவனமான, இந்தியாவைச் சேர்ந்த ஆயுத இடைத் தரகர் சுஷேன் குப்தாவின், 'டெப்சிஸ் சொல்யூஷன்ஸ்' இதற்கான, பில் கொடுத்துள்ளது. மொத்தம், 8.62 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதில், பாதி தொகை, சுஷேன் குப்தாவின் கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்க, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் லஞ்சம் தர முயன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சுஷேன் குப்தா. டசால்ட் நிறுவனம் வழங்கிய பணத்த, அவர் எதற்கு பயன்படுத்தினார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ரபேல் போர் விமானங்களின் மாதிரிகள், 50ஐ தயாரிக்க, சுஷேன் குப்தா நிறுவனத்துக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மாதிரிகள் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. மேலும், 'வாடிக்கையாளர்களுக்கு பரிசு' என, டசால்ட் நிறுவனம் கணக்கு காட்டியுள்ளதற்கு, பிரான்ஸ் லஞ்ச தடுப்பு பிரிவு கேள்வி எழுப்பியுள்ளது.லஞ்ச தடுப்புப் பிரிவின் அறிக்கைகளை, பிரான்ஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன; அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முறைகேடு நடக்கவில்லை!ரபேல் ஒப்பந்தத்தில் மோசடி நடந்ததாக, காங்., ஏற்கனவே கூறியது. ஆனால், எந்த முறைகேடும் நடக்கவில்லை என, உச்ச நீதிமன்றமும், சி.ஏ.ஜி., எனப்படும் கணக்கு தணிக்கை அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தில் எந்த ஊழலும், முறைகேடும் நடக்கவில்லை. அந்த நாட்டில் உள்ள வர்த்தகப் போட்டியினால், மோசடி நடந்துள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கலாம்; அதற்கும், நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.ரவிசங்கர் பிரசாத்மத்திய சட்ட அமைச்சர், பா.ஜ.,காங்., கேள்விகாங்., செய்தித் தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளதாவது:ரபேல் போர் விமானம் தயாரிக்கும் டசால்ட் நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு பெரிய தொகை வழங்கியதாக தெரியவந்துள்ளது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக, ராகுல் தொடர்ந்து கூறி வந்தது உண்மை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.இடைத்தரகரான சுஷேன் குப்தா, யார் யாருக்கு லஞ்சம், கமிஷன் கொடுத்துள்ளார் என்பது விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி என்ன பதில் சொல்லப் போகிறார்?இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X