''கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால், அனைவரும் தயக்கமின்றி ஓட்டுளிக்க வேண்டும்,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் கூறினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னையில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 1,061 இடங்களில், 5,911 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 28 ஆயிரத்து, 372 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இதில், 14 ஆயிரத்து, 276 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 7,095 கட்டுப்பாட்டு கருவிகள், 7,984 வி.வி.பேட் இயந்திரம் ஆகியவை, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுச்சாவடிகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இருந்து கண்காணிக்க முடியும். வாக்காளர்களுக்கு வலது கைக்கான கையுறை வழங்கப்படும். அலுவலர்களுக்கு, முக கவசம், கையுறை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், சாய்வு தளம், சக்கர நாற்காலி, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கொரோனா பரவலை தடுக்க, போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் தயக்கமின்றி ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE