பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு ஓட்டுச்சாவடிக்கு 12 'பி.பி.இ., கிட்' பாதுகாப்பு பணிகள் 'பரபர'

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:கொரோனா பாதித்து கண்காணிப்பில் இருப்பவர்கள் ஓட்டளிக்க, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; அதற்காக, 12 'பி.பி.இ., கிட்' வழங்கப்பட்டுள்ளது.கொரோனா பாதித்தவர் யாரும், தபால் ஓட்டு வசதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இதனால், அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிக்க விரும்புகின்றனர். தேர்தல் கமிஷன் ஏற்பாட்டில், 'சானிடைசர்'

திருப்பூர்:கொரோனா பாதித்து கண்காணிப்பில் இருப்பவர்கள் ஓட்டளிக்க, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; அதற்காக, 12 'பி.பி.இ., கிட்' வழங்கப்பட்டுள்ளது.கொரோனா பாதித்தவர் யாரும், தபால் ஓட்டு வசதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இதனால், அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிக்க விரும்புகின்றனர். தேர்தல் கமிஷன் ஏற்பாட்டில், 'சானிடைசர்' பாட்டில்கள், முககவசம், 'பி.பி.இ., கிட்', 'தெர்மல் ஸ்கேனர்' உட்பட, 13 வகையான பொருட்கள் அடங்கிய, கொரோனா 'கிட்' வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர் ஒவ்வொருவருக்கும், வலது கைக்கு மட்டும் 'கையுறை' வழங்கப்படும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர். கொரோனா பாதித்தவர்கள், மாலை 6:00 மணி முதல், 7:00 மணி ஓட்டளிக்க உள்ளனர்.மாலை, 6:00 மணிக்கு பிறகு, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தேவையெனில், 'பி.பி.இ., கிட்' அணிந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், 12'பி.பி.இ., கிட்'கள் வழங்கப்படும்.ஓட்டுச்சாவடி அலுவலர் பயன்படுத்தியது போக, மீதியுள்ள 'பி.பி.இ., கிட்'களை, கொரோனா பாதித்தவர்கள் ஓட்டளிக்க வழங்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''கொரோனா பாதித்தவர் தபால் ஓட்டுகேட்டு விண்ணப்பிக்கவில்லை.மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை, ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிக்கலாம். அப்போது, 'பி.பி.இ., கிட்' அணிந்தபடி சென்று ஓட்டளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா சிகிச்சை பெறுபவர்கள், ஓட்டளிக்க வர இயலாது; குணமாகி வந்து, கண்காணிப்பில் உள்ளவர்கள், பாதுகாப்புடன் சென்று ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X