அபாயகரமான மனிதர்: உச்ச நீதிமன்றம் காட்டம்

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய நசீர் மதானியை 'அபாயகரமான மனிதர்' என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.கடந்த 2008ம் ஆண்டு கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். அதில் தொடர்புடைய கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நசீர் மதானியிடம்
 அபாயகரமான மனிதர்: உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடில்லி: பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய நசீர் மதானியை 'அபாயகரமான மனிதர்' என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

கடந்த 2008ம் ஆண்டு கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். அதில் தொடர்புடைய கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நசீர் மதானியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் 2014ம் ஆண்டு மதானிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. 'நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் பெங்களூருவை விட்டு எங்கும் செல்லக் கூடாது' என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மதானி முறையிட்டார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் 'எனக்கு உடல்நலம் சரி இல்லாததால் என் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று அங்கு தங்குவதற்கு அனுமதி வழங்கவேண்டும். வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அங்கு தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதுமதானியை 'ஆபத்தான மனிதர்' என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
07-ஏப்-202118:09:44 IST Report Abuse
Swaminathan Chandramouli இது போன்று பல ஆபத்தானநல்லவர்கள் ஜாமீனில் வெளியே வந்து ஜாலியாக வெளியே சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் ப . சிதம்பரத்தை போல
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
06-ஏப்-202117:47:51 IST Report Abuse
Nallavan Nallavan அவரு மட்டுமா ???? அது சரி ......... இது உங்களுக்கு இப்பத்தான் தெரிஞ்சுதா ஜட்ஜு ஐயா ????
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
06-ஏப்-202116:54:00 IST Report Abuse
r.sundaram இந்த ஆபத்தான மனிதருக்கு எதற்கு ஜாமீன்? அதை கேன்சல் செய்து உள்ளே வைத்து கவனிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X