திருப்பூர்:தேர்தலையொட்டி, மதுக்கடைகள் மூடப்பட்டாலும், 'குடி'மகன்களுக்கு, மது தாராளமாக கிடைத்தது; வாக்காளர்களுக்கு, இவை கட்சியினர் மூலம் சப்ளை செய்யப்பட்டன.தேர்தலையொட்டி, நேற்று முன்தினம் முதல் இன்று (6ம் தேதி) வரை மதுக்கடைகள் மூடப்பட் டுள்ளன. மாநிலம் முழுதும், 3.29 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 2.2 கோடி ரூபாய் மதிப் புள்ள கஞ்சா மற்றும் புகையிலை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில், ஆளும் கட்சிப்பிரமுகர் வீடு உட்பட பல்வேறு இடங்களில், மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.டாஸ்மாக் கடைகளில், பெட்டி பெட்டியாக மது வகைகளை வாங்கி குவித்து, மும்மடங்கு வரை விலை அதிகரித்து விற்பது, வாக்காளர்களுக்கு சப்ளை செய்வது போன்றவை தான், பதுக்க லுக்கு காரணம்.போலீசார், பதுக்கி வைக்கப்பட்ட மது வகைகளை கண்டறிந்தாலும், கடந்த இரு நாட்களாக, மது வகைகள், 'குடி'மகன்களுக்கு தாராளமாக கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் கூட, 'குடி'மகன்கள், மது குடித்துவிட்டு, திரிந்ததையும், பிரசார நிறைவு நாளில், பிரதான கட்சி வேட்பாளர்களின் பிரசாரத்துக்கு அழைத்துவரப்பட்ட ஆட்கள் பலர், போதையில் மிதந்ததையும் பார்க்க முடிந்தது.பதுக்கல் 'பலே ஜோர்'தேர்தல் பணியே சுமையாக இருக்க, மது பதுக்கலைக் கண்டறிவதற்கான கூடுதல் நேரத்தை, போலீசார் ஒதுக்குவது என்பது சிரமமான விஷயம்தான்; அதையும்தாண்டி, மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.இருப்பினும், வழக்கமான நாட்களில் கூட, டாஸ்மாக் மதுக்கடை மற்றும் 'பார்' திறக்கப்படாத நேரங்களில்கூட, 'குடி'மகன்கள் அதிகாலை அல்லது நள்ளிரவில் கூட, திருப்பூரில், மது வகைகளை எளிதாக வாங்கிச் செல்ல முடிகிறது. டாஸ்மாக் கடை மற்றும் 'பார்' கதவு இடுக்கு மற்றும் ஜன்னல் வழியாக, தினமும், 'சரக்கு' விற்பனையாகி கொண்டுதான் இருக்கிறது.டாஸ்மாக் ஊழியர், 'பார்' ஊழியர்கள் மட்டுமின்றி, இதற்கு 'பார்' உரிமையாளர்கள் சிலரும், துணை புரிகின்றனர். இதற்கு போலீசுக்கு 'மாமூல்' தரப்படுகிறது.இவர்கள், மதுக்கடைகள் மூடப்படும் தருணங்களை, தங்களுக்கு வருவாய் ஆக்க முயல்கின்றனர். முதலிலேயே, இதுபோன்று தவறு இழைப்போருக்கு 'தாராளம்' காட்டுவதால்தான், தேர்தல் நேரங்களில்கூட, அவர்களது 'பேராசை' அளவு கடந்து நிற்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE