என்ன கேட்டாலும் சொல்வதில்லை... எவ்வளவு கொடுத்தாலும் மறுப்பதில்லை!

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
நீண்ட நாள் இடைவெளிக்கு பின், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சித்ராவும், மித்ராவும் சென்றனர். சுவாமி தரிசனம் முடித்து, பிரகாரத்தில் அமர்ந்தனர்.''அக்கா... இரண்டு வாரத்துக்கு முன்னாடி, சுவாமி மீது சூரிய ஒளி விழுந்துச்சுனு செய்தி படிச்சேன். அதில பக்தர்களுக்கு குழப்பம் ஆயிடுச்சு. ஒரு சிலர் தப்பான தேதி சொல்லிட்டாங்களாம்,''''சரி... சரியான தேதி பத்தி, கோவில் அதிகாரி ஒரு
 என்ன கேட்டாலும் சொல்வதில்லை... எவ்வளவு கொடுத்தாலும் மறுப்பதில்லை!

நீண்ட நாள் இடைவெளிக்கு பின், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சித்ராவும், மித்ராவும் சென்றனர். சுவாமி தரிசனம் முடித்து, பிரகாரத்தில் அமர்ந்தனர்.''அக்கா... இரண்டு வாரத்துக்கு முன்னாடி, சுவாமி மீது சூரிய ஒளி விழுந்துச்சுனு செய்தி படிச்சேன். அதில பக்தர்களுக்கு குழப்பம் ஆயிடுச்சு. ஒரு சிலர் தப்பான தேதி சொல்லிட்டாங்களாம்,''''சரி... சரியான தேதி பத்தி, கோவில் அதிகாரி ஒரு விளக்கம் குடுத்திருக்கலாம். ஆனா, அவர் எதையுமே கண்டுக்கலையாம். இதே மாதிரி, சித்திரை தேர்த்திருவிழா இந்த வருஷமாச்சும், இருக்குமா, இருக்காதான்னு தெரியலையே, எல்ேலாரும் கேக்கறாங்க,''''அதைப்பத்தி தெரிஞ்சுக்க பக்தர்கள் போன் செஞ்சாலும், அதிகாரி எப்போதும் 'தொடர்பு எல்லைக்கு அப்பால்' தானாம். இதனால், பக்தர்கள் கடும் அதிருப்தியில இருக்காங்களாம்,''''நானும் கேள்விப்பட்டேன். திருவிழா பத்தி ஒரு தகவல் கேட்டா, சொல்றதுக்கு ஆபீசருக்கு என்ன கஷ்டமோ தெரியலே. ஆனா, அதே நேரம், பெட்டிஷன் போடறவங்களுக்கு ராஜ மரியாதை குடுக்கிறாராம்,''''அவரே எழுந்திருச்சு நின்னு, வணக்கம் சொல்லி வரவேற்கிறாராம். அதே சமயத்தில, பக்தர்கள், கட்டளைதாரர்கள் போனா, உட்காருன்னு கூட சொல்றதில்லையாம். இதையெல்லாம் எங்க போய் சொல்றது புலம்பறாங்களாம்,''பேசிக்கொண்டே இருவரும் எழுந்து வெளியே வரும் போது, ஒரு இளைஞர், பதட்டத்துடன் அங்குமிங்கும் தேடிக் கொண்டிருந்தார்.அதனை பார்த்த சித்ரா, ''மருது பாண்டி என்ன தேடறே...'' என்றாள்.''அக்கா, காஸ்ட்லி மொபைல்ங்க. பாக்கெட்ல தான் வைச்சு இருந்தேன். எப்படி 'மிஸ்' ஆச்சுன்னு தெரியல'' என, புலம்ப, ''பக்கத்துல தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு; ஒரு 'கம்ப்ளைன்ட்' கொடுத்துடுங்க'' என்றாள் சித்ரா.''அவர் 'கம்ப்ளைன்ட்' கொடுக்கறதுக்கு பதிலா புதுசா போனே வாங்கிடலாம்க்கா,'' என, மித்ரா சொல்ல, 'என்னடி… இப்படி சொல்ற,'' என்றாள் சித்ரா.''ஆமாங்க்கா, ஸ்டேஷன் க்ரைம் டீம்ல, மொபைல் போன் 'மிஸ்' ஆகிடுச்சுன்னு கம்ப்ளைன்ட் குடுக்கறவங்கிட்ட, மூனாயிரம், நாலாயிரம்னு வசூல் பண்றாங்களாம். 'டைரி' போட்டு வேற எழுதி வைக்கிறாங்களாம்,''''மித்து, இவ்வளவு துாரம் வந்துட்டோம்; சேவூர் வரைக்கும் போய், என் பிரண்ட் 'காளியம்மாள்' இருக்கா; பார்த்துட்டு வந்துடலாம்டி'' என, சித்ரா கூற, வண்டியை, சேவூர் நோக்கி விரட்டினாள் மித்ரா.''அதே க்ரைம் டீம்ல இன்னொரு கூத்தும் நடக்குது,'' என்ற மித்ரா, ''அங்க இருக்கற ஒரு போலீஸ்காரரு, குடிபோதைல, லைசென்ஸ் இல்லாம டூவீலர் ஓட்டி சிக்கறவங்களோட டூவீலர பறிமுதல் பண்ணி, ஸ்டேஷன் பாதுகாப்புல வைக்காம, டூவீலர் ஸ்டாண்ட்லயும், தன்னோட வீட்லயும் நிறுத்தி வைச்சுக்குவாராம்,''''அந்த 'கேஸ்' முடிச்சு கொடுக்க, மினிமம் பத்தாயிரம் ரூபாய் வரை வசூல் அள்ளிடறாராம். லைசென்ஸ், டாக்குமென்ட் இல்லாம, 'கேஸ்' முடிக்க 'லேட்' பண்றவங்களோட டூவீலர, வித்தும் காசு பாத்துடறாராம்,'' என்றாள் மித்து.''ஆமாங்க்கா. போன வாரம் கூட என் சொந்தக்கார பையன் ரஞ்சித், இப்படி தான் லைசென்ஸ் இல்லாம மாட்டிக்கிட்டான். கேஸ் முடிக்கணும்னா, 10 ஆயிரம் ரூபா 'டிமாண்ட்' பண்ணாங்களாம். குற்றத்தை தடுக்கிற 'க்ரைம் டீம்'லயே இப்படி இருந்தா, எப்படி மித்து, 'க்ரைம் ரேட்' குறையும்,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.சேவூர் சென்று தோழியை பார்த்துவிட்டு, இருவரும் கிளம்பினர்.''ரெண்டு நாளைக்கு முன்னாடி, எலக் ஷன் ஆபீசருக்கு புகார் போனதன் அடிப்படைல, ஆளுங்கட்சி நிர்வாகியின் வீட்ல இருந்து, 2,000 மதுபாட்டில் பறிமுதல் பண்ணாங்க. இந்த விஷயத்தை கூடவா உங்களால மோப்பம் பிடிக்க முடியலையான்னு, லோக்கல் போலீசுக்கு, ஆபீசர் செம டோஸ் விட்டாராம்,'' என்றாள் மித்ரா.''சொன்ன மாதிரி, உள்ளூர் போலீசுக்கு தெரியாமல போயிடும். இனி மேலாவது சரியாயிட்டாங்கன்னா பரவாயில்ல. எலக் ஷன் பட்டுவாடா ஒரு பக்கம் நடந்துட்டு இருந்தாலும், கலெக் ஷன்ல குறியா இருக்காங்க'' என்றாள் சித்ரா.''யாருக்கா அது…'' என மித்ரா கேட்க, ''பல்லடத்தில, ஒரு குட்டி ஆபீசரு, பட்டா மாறுதல் செய்ணும்னா, மூனாயிரம் முதல் அஞ்சாயிரம் ரூபாய் வரைக்கும் 'பீஸ்' வாங்கறாராம். வீட்ட வித்து, காட்ட வித்து சம்பாதிச்சாலும் இவங்களுக்கு கப்பம் கட்டியே மாளாதுன்னு, விவசாயிங்க புலம்பறாங்க'' என்றாள் சித்ரா.''சோறு போடுற விவசாயிங்க வாயில மட்டும் விழவே கூடாது,'' என்ற மித்ரா, ''இந்த 'சாமிநாதன்' மேட்டர் தெரியுமா'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''அதே ஊர்ல, தி.மு.க.,கூட்டணில ஓயாம சண்டை நடக்குதாம். முன்னாடி தான் 'சீட்' வாங்க சண்டை போட்டாங்க. இப்ப பம்பரம் கட்சிக்கு 'சீட்' ஒதுக்கியும் சண்டை ஓயலையாம். இதை பார்த்த வேட்பாளர், இருதலை கொள்ளியாட்டம் முழிக்கிறாராம்,''''அங்க மட்டுமில்லடி, எங்கெல்லாம் அரசியல் கட்சி இருக்குதோ, அங்கெல்லாம், கோஷ்டி பூசல் இருக்கும். பல்லடம் மட்டும் விதி விலக்கா என்ன,'' என்ற சித்ரா, ''எலக் ஷனில், கடைசி நேரத்தில, 'பட்டுவாட' ஜோரா நடந்துச்சாம்,''''ரெண்டு முக்கிய கட்சிக்காரங்க, பூந்து வெளையாடிட்டாங்களாம். ஜனங்க, ரெண்டு பேர்கிட்டயும் வாங்கிட்டாங்களாம். ஆனா, யாருக்கு ஓட்டு போடறாங்கன்னுதான் தெரியலே...'' சிரித்தாள் சித்ரா.''ஆமாங்க்கா... அந்தந்த வீதியிலுள்ள வீடுகளுக்கு கனகச்சிதமா போயி, 'அக்கா, சவுக்யமா? காலேஜிலிருந்து தம்பி வந்துட்டாரா? அப்படியிப்படின்னு கேள்வி கேட்டுட்டு, டெலிவரி பண்ணிட்டாங்களாம்,''''மித்து, மக்கள் ஒத்துழைப்பு இல்லாட்டி ஒண்ணும் பண்ண முடியாது. அவங்க மொதல்ல திருந்தணும்,'' ஆதங்கப்பட்ட சித்ரா, ''கூட்டம் சேர்க்கறதுல தோழர்களுக்குள் போட்டி தீரவே இல்ல. சின்ன தெருமுனைபிரசாரமா இருந்தாலும் சரி, பொதுக்கூட்டமா இருந்தாலும் சரி, கூட்டம் சேர்க்கறதுல, மா.கம்யூ.,கெட்டிக்காரங்க,''''அப்படித்தான், பிரகாஷ் காரத் வந்தப்ப, கூட்டம் சேர்த்திட்டாங்க. ஆனா, இந்திய கம்யூ., தலைவர் ராஜா வந்தப்ப, கூட்டமே இல்லை. கூட்டத்துக்கு வந்த சுத்தியல் அரிவாள்காரங்க, என்ன தோழரே கூட்டம் சேர்க்கறதுல எங்க கூட மோத முடியலையான்னு, கலாய்ச்சாங்களாம்,''''இதே போல, 'சிட்டிங்' வி.ஐ.பி.,யால கூட்டம் சேர்க்க முடியலையாம்...''''ஏன், என்னாச்சு?'''ஆனந்தமானவர், கோழிப்பண்ணை தொகுதிய பிடிச்சுட்டதால, அவர் ஆட்கள் எல்லோரும்எலக் ஷன் வேலைக்கு, அங்க போயிட்டாங்க. வடக்குல சிலர் மட்டும் தான் இருக்காங்க. அதுவும், சாயந்திரம் எலக் ஷன் ஆபீசுக்கு வந்து, தலையை காட்டிட்டு போறாங்களாம்,''''இதனால், 'விஜய'மானவர், வந்தவங்களோட பிரசாரத்துக்கு போயி சமாளிச்சுட்டாராம்,'' என்றாள் மித்ரா.''எது எப்டியோ,எலக் ஷன் டேட்டும் வந்தாச்சு. கட்சிக்காரங்க சத்தமும் இல்லை. தெருவெல்லாம் அமைதியா இருக்குது. என்ன எல்ேலாரும் மறக்காம ஓட்டு போட்டா சரிதான்...''''கரெக்டா சொன்னீங்க. எங்க தெருவிலும் சொல்லிட்டேன். யார் ஜெயிச்சு, தோத்தாலும் பரவாயில்ல. ஜனநாயகம் ஜெயிக்கணும்,''''சபாஷ் மித்து,'' என்று சொன்ன சித்ரா, திருமுருகன்பூண்டியில், ஒரு பேக்கரி முன் வண்டியை நிறுத்தினாள்.''ஏங்க்கா,'' மித்து கேட்டதற்கு, ''வெயில் இப்பவே இப்படி கொதிக்குது. அக்னி நட்சத்திரம் வந்தா கேக்கவே வேணாம். அதனாலதான் ஜில்லுன்னு ஒரு ஜூஸ் குடிக்கலாம்னு நெனச்சேன்,'' பதில் சொன்ன சித்ரா, ஜூஸ் ஆர்டர் செய்தாள்.''அப்ப, டபுள் ஓ.கே.,'' சிரித்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X