பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு சாதனை காங்கயம் கலக்குமா?

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:இந்த முறையும், காங்கயம் தொகுதி ஓட்டுப்பதிவில், சாதனை படைக்குமா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த 2016 சட்டசபை தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம் தொகுதியில் தான் அதிகபட்சமாக, 78.89 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது.அவிநாசி - 77.76, தாராபுரம் - 76.83, மடத்துக்குளம் - 76.09, உடுமலை - 73.56, பல்லடம் - 71.68, திருப்பூர் தெற்கு - 66.69, திருப்பூர் வடக்கு - 66.62 என ஓட்டுப்பதிவு சதவீதம்

திருப்பூர்:இந்த முறையும், காங்கயம் தொகுதி ஓட்டுப்பதிவில், சாதனை படைக்குமா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த 2016 சட்டசபை தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம் தொகுதியில் தான் அதிகபட்சமாக, 78.89 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது.அவிநாசி - 77.76, தாராபுரம் - 76.83, மடத்துக்குளம் - 76.09, உடுமலை - 73.56, பல்லடம் - 71.68, திருப்பூர் தெற்கு - 66.69, திருப்பூர் வடக்கு - 66.62 என ஓட்டுப்பதிவு சதவீதம் இருந்தது.ஓட்டுப்பதிவு சதவீதத்தில் முதலிடம் பெற்ற காங்கயத்தில் இந்த முறை, 23 ஆயிரத்து, 369 வாக்காளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். மொத்தம், 2.57 லட்சம் வாக்காளர் உள்ளனர்.தேர்தல் கமிஷன், நுாறு சதவீத இலக்கை அடைய விரும்புகிறது. ஆனால், கடந்த முறை, திருப்பூர் மாவட்டத்தில், எந்த தொகுதியுமே, எண்பது சதவீத ஓட்டுப்பதிவையே தாண்டவில்லை என்பது வேதனைக்குரியதுதான்.மாவட்டத்தில் அதிகபட்சம் ஓட்டுப்பதிவு பெற்ற தொகுதி என்ற சாதனையை, கிராமப்புறங்களை அதிகம் கொண்ட, காங்கயம், இந்த முறை தக்க வைப்பதோடு, நுாறு சதவீத ஓட்டுப்பதிவை நெருங்குமா என்பது, இன்று இரவு தெரிந்துவிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X