தமிழ்நாடு

உங்கள் 'மனசாட்சி'; 5 ஆண்டுக்கு 'சாட்சி': தவறாமல் ஜனநாயக கடமையாற்றுங்க இன்று: ஒரு ஓட்டு தானே என அலட்சியம் வேண்டாமே!

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:நுாறு சதவீதத்தை ஓட்டுப்பதிவு நெருங்குவதற்கு, மாவட்டத்தில் ஒவ்வொரு வாக்காளரும், இன்று, கடமை தவறாமல், ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.சட்டசபை தேர்தல், ஓட்டுப்பதிவு, இன்று நடக்கிறது. காலை 7:00 மணிக்கு துவங்கி, இரவு 7:00 வரை, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம்.'ஒரு ஓட்டு தானே... போடாவிட்டால் தான் என்ன?' என்ற அலட்சியம் வேண்டாம். திருப்பூர் போன்ற தொழில் மற்றும் விவசாயம் சார்
உங்கள் 'மனசாட்சி'; 5 ஆண்டுக்கு 'சாட்சி': தவறாமல் ஜனநாயக கடமையாற்றுங்க இன்று: ஒரு ஓட்டு தானே என அலட்சியம் வேண்டாமே!

திருப்பூர்:நுாறு சதவீதத்தை ஓட்டுப்பதிவு நெருங்குவதற்கு, மாவட்டத்தில் ஒவ்வொரு வாக்காளரும், இன்று, கடமை தவறாமல், ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.சட்டசபை தேர்தல், ஓட்டுப்பதிவு, இன்று நடக்கிறது. காலை 7:00 மணிக்கு துவங்கி, இரவு 7:00 வரை, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம்.'ஒரு ஓட்டு தானே... போடாவிட்டால் தான் என்ன?' என்ற அலட்சியம் வேண்டாம்.
திருப்பூர் போன்ற தொழில் மற்றும் விவசாயம் சார் மாவட்டங்களில், ஒவ்வொரு ஓட்டுகளும், ஜனநாயக கடமையின், முழுமையான அர்த்தங்களாக பரிணமிக்கக்கூடியவை.திருப்பூரில் குறைவுகடந்த சட்டசபை தேர்தலில், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில், ஓட்டு சதவீதம், 67 சதவீதத்தை விட குறைவாகவே இருந்தது. 2011 சட்டசபை தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில், 78.02 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது. இதுவே, 2016 தேர்தலில், 72.68 சதவீதமாக சரிந்தது.
எந்த தொகுதியிலும், ஓட்டு சதவீதம், 80 சதவீதத்தை கூட தாண்டவில்லை. இது, தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.நிஜ வெற்றி இல்லைமாவட்டத்தில், முப்பது சதவீதம் வரை, ஓட்டுகள் பதிவாகாத நிலை ஏற்பட்டால், மூன்று வாக்காளரில், ஒருவரின் கருத்து பதிவாவதில்லை என்று அர்த்தம். குறிப்பாக, வெற்றி பெறும் வேட்பாளர் பெறும் ஓட்டுகளின் அளவு, கிட்டத்தட்ட ஓட்டு செலுத்தாதவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது.இதனால், மாவட்டத்தில் வெற்றிபெறும் வேட்பாளர், உண்மையான வெற்றியை பெற்றவராக கருத முடியாது. கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் ஓட்டு பதிவாகியிருந்தால், வேட்பாளரின் வெற்றி கேள்விக்குரியதாகி விடும்; இதேபோல்,தோல்வியுறும் வேட்பாளரும் வாகை சூட வாய்ப்புண்டு.ஒரு ஓட்டின் மகத்துவம்ராஜஸ்தானில், 2008-ல், நதட்வாரா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் கல்யாண் சிங் சவுகான், 62 ஆயிரம் 216 ஓட்டுகளும், காங்., வேட்பாளர் சி.பி.ஜோஷி 62 ஆயிரத்து 215 ஓட்டுகளும் பெற்றனர்.ஒரே ஓட்டில் வெற்றிவாய்ப்பை இழந்த சி.பி.ஜோஷி, மாநில காங்., தலைவராக இருந்தார்; முதல்வராவார் என அறியப்பட்டவர். ஆனால் அங்கு அப்போது, காங்., ஆட்சியமைத்தும், ஜோஷி, முதல்வர் வாய்ப்பை பறிகொடுக்க வேண்டியிருந்தது.திருப்பூர் மாவட்டத்தில், எட்டு தொகுதிகளிலுமே போட்டி கடுமையானதாக இருக்கிறது. சில நுாறு ஓட்டுகள் அல்லது நுாற்றுக்கும் குறைவான ஓட்டுகள் கூட, வேட்பாளரின் வெற்றி - தோல்வியை நிர்ணயித்துவிடும்.
கடந்த 1984ல் திருப்பூர் தொகுதியில், இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன், அ.தி.மு.க., வேட்பாளர் மணிமாறனை, ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தோற்கடித்தார். இத்தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., - ம.நீ.ம., கூட்டணி மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியும் களம் காண்கிறது. சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.கொரோனா பரவல் நீடிக்கும் நிலையில், முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து, ஓட்டுச்சாவடிக்கு சென்று, ஒரு சிறந்த வேட்பாளரை தேர்வு செய்து, ஓட்டளிக்க வேண்டியது, வாக்காளர்கள் ஒவ்வொருவரின் கடமையும்கூட.வேட்பாளர் கலைவாக்குறுதி மழை...வாக்குகளுக்கோ விலைசிறந்தவருக்குஓட்டளிப்போம்நம்மை மறந்தோரைவிரட்டியடிப்போம்!
ராஜஸ்தானில், 2008-ல், நதட்வாரா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் கல்யாண் சிங் சவுகான், 62 ஆயிரம் 216 ஓட்டுகளும், காங்., வேட்பாளர் சி.பி.ஜோஷி 62 ஆயிரத்து 215 ஓட்டுகளும் பெற்றனர்.ஒரே ஓட்டில் வெற்றிவாய்ப்பை இழந்த சி.பி.ஜோஷி, மாநில காங்., தலைவராக இருந்தார்; முதல்வராவார் என அறியப்பட்டவர்.இன்றைய முதல் கடமை!அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக, தேர்தல் நாளன்று, விடுமுறை அளிக்கப்படுகிறது. சுற்றுலா செல்வது, 'டிவி' நிகழ்ச்சிகளில் பொழுதைக் கழிப்பது என்றில்லாமல், ஓட்டு செலுத்துவதை, இன்றைய தினத்தின் முதல் கடமையாக ஒவ்வொருவரும் கருத வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஏப்-202108:29:53 IST Report Abuse
ஆப்பு மனசாட்சியே இல்லாத அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், கூட்டணிகள். இதுல மனசாட்சியோட யாருக்குப் போடறது? நோட்டாவுக்குத்தான் போடணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X