பொது செய்தி

தமிழ்நாடு

பணம் பட்டுவாடா தீவிரம் :பறக்கும் படை 'குறட்டை'

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் தொகுதியில் நேற்று பணம் பட்டுவாடா 'ஜோராக' நடந்தது.பல்லடம் தொகுதியில், 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும், அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன் மற்றும் ம.தி.மு.க., வேட்பாளர் முத்துரத்தினம் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக, வாக்காளர்களை வளைக்கும் முயற்சியில் இரு கட்சியினரும் தீவிரமாக இறங்கினர்.பெரும்பாலான

பல்லடம்:பல்லடம் தொகுதியில் நேற்று பணம் பட்டுவாடா 'ஜோராக' நடந்தது.பல்லடம் தொகுதியில், 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும், அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன் மற்றும் ம.தி.மு.க., வேட்பாளர் முத்துரத்தினம் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக, வாக்காளர்களை வளைக்கும் முயற்சியில் இரு கட்சியினரும் தீவிரமாக இறங்கினர்.பெரும்பாலான பகுதிகளில், இரவு நேரங்களில் பணப்பட்டுவாடா நடந்தது. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில், தங்களுக்கு சாதகமானவர்களின் வீடு தேடி சென்று, கட்சியினர் பண பட்டுவாடா செய்தனர். சில இடங்களில், டோக்கனாகவும், ரூபாயாகவும் வழங்கினர். ஆனால், போலீசார், பறக்கும் படையினர் என யாரும் கண்டுகொள்ளவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X