திருப்பூர்:தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி சுவர்களில், வண்ண ஓவியங்கள் வரைந்து 'பட்டாம்பூச்சி' அமைப்பினர், தமிழகம் முழுதும், அரசு பள்ளிகளை அழகுபடுத்தி வருகின்றனர்.இந்த அமைப்பில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் அரசு பள்ளி ஆசிரியர்கள். கடந்த இரு ஆண்டுகளில் திருப்பூர் பகுதியில் உள்ள, 80க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சித்திரங்களால் திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.பட்டாம்பூச்சி அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் கூறியதாவது:அரசு பள்ளிகளில்தான் பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன. ஓட்டுச்சாவடியில் அப்பள்ளி ஆசிரியர்கள், ஊர்மக்களின் நன்கொடையால் உள்புற, வெளிப்புற சுவர்களில் பல வண்ண ஓவியங்கள், பாடம் தொடர்புடைய படைப்புகள், கற்றல் சார்ந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.கடந்த தேர்தல்களில் வகுப்பறையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பலரது சேவைகள் வீணடிக்கப்பட்டது. எனவே, 'பசை' கொண்டு ஒட்டாமல், மாற்று வழியாக, 'டபுள் சைடு ஸ்டிக்கர்' பயன்படுத்தலாம்.இதுவே, தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கும் ஆசிரியர்கள், பெற்றோர் தரப்பில் வைக்கப்படும் முக்கிய வேண்டுகோள்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE