சட்டசபை தேர்தல் பணி: தபால் நிலையம் விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தல் பணி: தபால் நிலையம் விடுமுறை

Added : ஏப் 06, 2021
Share
திருப்பூர்:தேர்தலின்போது, வாக்காளர் சேர்க்கை, ஓட்டுப்பதிவு, எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் சம்பந்தமான அனைத்து பணிகளிலும், அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.இதில், தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்வாரியம், ராணுவம், தபால்துறை உள்ளிட்ட சேவை துறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு. ஆனால், இம்முறை ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, தபால்துறைக்கு, தேர்தல் கமிஷன், 'செக்'

திருப்பூர்:தேர்தலின்போது, வாக்காளர் சேர்க்கை, ஓட்டுப்பதிவு, எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் சம்பந்தமான அனைத்து பணிகளிலும், அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.இதில், தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்வாரியம், ராணுவம், தபால்துறை உள்ளிட்ட சேவை துறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு. ஆனால், இம்முறை ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, தபால்துறைக்கு, தேர்தல் கமிஷன், 'செக்' வைத்துள்ளது.தபால் துறையின் 'குரூப் டி' ஊழியர்கள் மட்டுமே, அதுவும் சொற்ப அளவில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நீண்ட காலத்துக்கு பின், தபால் ஊழியர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஓட்டுச்சாவடிகள் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். பூத் போலிங் ஆபிசர், சீல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 70 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மத்திய தபால்துறை ஊழியர்கள் அனைவருக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தபால் நிலையங்கள் இயங்காது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X