பொது செய்தி

தமிழ்நாடு

32 'மாடல் பூத்'; 8 மகளிர் ஓட்டுச்சாவடி:மாவட்டத்தில் அமைக்கப்பட்டு தயார் நிலை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளரை கவரும் வகையில், 32 மாதிரி ஓட்டுச்சாவடிகளும், எட்டு அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.மாவட்டத்தின், எட்டு தொகுதிகளில், ஆயிரத்து 110 மையங்களில், 3 ஆயிரத்து 343 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர், ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு இன்று நடக்க உள்ள நிலையில்,
 32 'மாடல் பூத்'; 8 மகளிர் ஓட்டுச்சாவடி:மாவட்டத்தில் அமைக்கப்பட்டு தயார் நிலை

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளரை கவரும் வகையில், 32 மாதிரி ஓட்டுச்சாவடிகளும், எட்டு அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.மாவட்டத்தின், எட்டு தொகுதிகளில், ஆயிரத்து 110 மையங்களில், 3 ஆயிரத்து 343 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர், ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு இன்று நடக்க உள்ள நிலையில், வாக்காளரை கவரும் வகையிலான, 'மாதிரி ஓட் டுச்சாவடி'களும், பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையான, பெண்கள் ஓட் டுச்சாவடிகளும் அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.வழக்கமான ஓட்டுச்சாவடிகள் போலன்றி, வாழைமர தோரணங்கள், அழகான இருக்கைகள், பச்சை, சிவப்பு கம்பள விரிப்புகள் என திருவிழா வுக்கான அலங்காரத்துடன் அமைக்கப்படுபவைதான், இந்த மாதிரி ஓட்டுச்சாவடிகள்.அவிநாசியில், ராயர் கல்வி நிலையம், அம்மாபாளையம் ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி; கணியாம்பூண்டி மைக்ரோ கிட்ஸ் பள்ளிகளில், மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் வடக்கில், அண்ணா நகர் முருகு மெட்ரிக் பள்ளி, மண்ணரை நைருதி பள்ளி, இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி, வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி;திருப்பூர் தெற்கில், கருவம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி, தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அரண்மனைப்புதுார் மாநகராட்சி பள்ளி; செயின்ட் ஜோசப் பள்ளி;பல்லடத்தில், ஆராக்குளம், சேமலைக்கவுண்டன்பாளையம், ராமி யாம் பாளையம், வடுகபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன.இதேபோல், தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளிலும், மாதிரி ஓட்டுச்சாவடி மற்றும் மகளிர் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.மகளிர் ஓட்டுச்சாவடிஅவிநாசி - அவிநாசி அரசு பெண்கள் பள்ளி, திருப்பூர் வடக்கு - அங்கேரிபாளையம் கொங்கு மெட்ரிக் பள்ளி, திருப்பூர் தெற்கு - ஜெய்வாபாய் பள்ளி, பல்லடம் - பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட, எட்டு தொகுதிகளிலும், தலா ஒரு அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X