பொங்கலுார்:முருங்கை வழக்கமாக தை மாதத்தில்பூக்கத் துவங்கி மாசி மாதத்தில் அறுவடைக்கு வரும்.இந்த ஆண்டு தை மாதம் வரை அடைமழை பெய்ததால் பூக்கள் உதிர்ந்தன. பூக்கும் பருவம் தள்ளிப்போனது. மாசியில் பூக்கத் துவங்கி பங்குனி இறுதியில் முருங்கை அறுவடைக்கு வந்துள்ளது.சீசன் களை கட்டியுள்ளதால் தற்போது சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதுவரை அதிக விலைக்கு விற்பனையான முருங்கை தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. திருப்பூர் மார்க்கெட்டில் குட்டை ரகம் ஒரு காய் ஒரு ரூபாய்க்கும், நெட்டை ரகம் மூன்று ரூபாய்க்கும் மொத்த விலையில் வாங்கப்படுகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பங்குனி மாதம் பிறந்ததும் முருங்கை விலை வீழ்ச்சி அடைவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி மாத இறுதியில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இனி ஒரு மாதத்திற்கு வரத்து அதிகமாக இருக்கும். அதுவரை கட்டுப்படியான விலை கிடைக்க வாய்ப்பில்லை. விலை வீழ்ச்சி ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு சில முன்னோடி விவசாயிகள் முருங்கையை கவாத்து செய்துவிட்டனர். அவை வைகாசி பட்டத்தில் காய்ப்புக்கு வரும் போது நல்ல விலை கிடைக்கும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE