சிக்கிம் - நேபாள எல்லை பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேற்கு வங்கம், அசாம் மற்றும் பீஹார் உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்க்டாக்கின் தென்கிழக்கு பகுதியில் 25 கி.மீ தொலைவில் இரவு 8.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.4 ரிக்டராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறுகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவில் அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீஹார் போன்ற சில மாநிலங்களிலும், நேபாளம், பூடான் போன்ற நாடுகளின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மக்களில் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தின் தாக்கம் மற்றும் பாதிப்பு விவரங்கள் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட அசாம், பீஹார், சிக்கிம் மாநிலங்களின் முதல்வர்களுடன் தொலைபேசியில் விவரங்களை கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE