திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 3,343 ஓட்டுச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அவற்றில், 50 சத வீத சாவடிகளில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அந்தந்த தொகுதிகளில் இருந்து இவற்றை கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின், எட்டு தொகுதிகளில் நடக்கும் ஓட்டுப்பதிவை கண்காணிக்க, மாவட்ட கண்காணிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில், இரண்டாவது தளத்தில், 'சிசிடிவி' கேமரா கண்காணிப்புகளை கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு மணி நேர இடைவெளியில், ஓட்டுப்பதிவு விவரங்களை அறிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.அதற்காக, தொகுதிக்கு மூன்று பேர் வீதம், துணை தாசில்தார்கள் தலைமையில், எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், விவரங்களை சேகரித்து, கலெக்டருக்கு அனுப்புவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE