அவிநாசி:வேட்பாளர்களின் ஒட்டுமொத்த சுற்றுப்பயணம் கற்றுக்கொடுத்த ஒரே பாடம், வெற்றி பெறும் வேட்பாளர், அடிக்கடி தொகுதி பக்கம் வந்து, மக்களை சந்தித்து செல்ல வேண்டும் என்பது தான்.அவிநாசி சட்டசபை தொகுதியில் பிரசார பயணம் முடித்த வேட்பாளர்கள், அவர்களுடன் சென்ற கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:வெற்றி பெறும் எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் உள்ளிட்ட உயர் பதவியில் இருக்கும் போது, தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை எளிதாக கொண்டு வர முடியும் என்பது உண்மை தான். அந்த வகையில் பல பணிகள் தொகுதிக்குள் நடந்துள்ளன.அதேநேரம், வெற்றி பெறுவோர், மாதம் ஒரு முறையோ, இரு மாதத்துக்கு ஒரு முறையோ தொகுதி பக்கம் வந்து, மக்களை சந்தித்து செல்ல வேண்டும். அவர்களின் குறைகளை கேட்டு செல்ல வேண்டும்; தீர்வு ஏற்படுத்த வேண்டும்.அலுவல் காரணமாக பல நேரங்களில் அவர்களால் தொகுதி பக்கம் வராமல் போவதற்கான சூழல் ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே, நம்பிக்கைக்குரிய ஒருவரை தங்களின் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். அவரை எளிதில் சந்தித்து, மக்களின் குறை கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும்.பொதுவாக, வாக்காளர்களின் குறைகளை காது கொடுத்து கேட்கும் வேட்பாளராக, வெற்றி பெறும் வேட்பாளர் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். பொதுமக்களின் இந்த எதிர்பார்ப்பு தான், பிரசார பயணத்தின் முக்கிய அனுபவமாக இருந்தது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE