பொது செய்தி

தமிழ்நாடு

'கெத்து' காட்டும் 'கரை வேட்டி'களுக்கு தடை! ஓட்டுச்சாவடியில் வேட்பாளருக்கு மட்டுமே அனுமதி

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:'ஓட்டுச்சாவடிக்குள், வேட்பாளரை அனுமதிக்கலாம்; வேட்பாளருடன் வரும் கட்சியினரை அனுமதிக்கக்கூடாது' என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு நடத்தப்படுவதை, வேட்பாளர்கள் பார்வையிடுவதற்கு அனுமதி உண்டு; அப்போது, கரை வேட்டிகள் சகிதம் சக கட்சியினர் மற்றும் கூட்டணியினர் உடன் வருவது வழக்கம்.அனுமதிக்காவிட்டால், கட்சி நிர்வாகிகள் தக ராறில்

திருப்பூர்:'ஓட்டுச்சாவடிக்குள், வேட்பாளரை அனுமதிக்கலாம்; வேட்பாளருடன் வரும் கட்சியினரை அனுமதிக்கக்கூடாது' என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு நடத்தப்படுவதை, வேட்பாளர்கள் பார்வையிடுவதற்கு அனுமதி உண்டு; அப்போது, கரை வேட்டிகள் சகிதம் சக கட்சியினர் மற்றும் கூட்டணியினர் உடன் வருவது வழக்கம்.அனுமதிக்காவிட்டால், கட்சி நிர்வாகிகள் தக ராறில் ஈடுபடுவார்கள் என்று கருதி, இவர்களை போலீசார், ஓட்டுச்சாவடிகளில், அனுமதித்துவிடுவதுண்டு.'கண்டிப்பாக, கட்சி நிர்வாகிகளை அனுமதிக்கக் கூடாது' என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிக்குள் கட்சி முகவர்களை, அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பதை, வேட்பாளர்கள், 'தந்திரமாக' பயன்படுத்துவர்; இவ்வாறு, அனுமதிக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், போலீசாருக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள்:ஓட்டுச்சாவடிக்கு முன், வாக்காளர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது. வரிசையாக நிற்கும் வாக்காளர்களிடம், கட்சியினர் புகுந்து, பிரசாரம் செய்வதோ, தங்கள் வேட்பாளருக்கு ஓட்டளிக்க வற்புறுத்துவதோகூடாது.சமூக இடைவெளி, முககவசம் அணிதல், கையுறை பயன்படுத்துதல், சானிடைசர் கொண்டு கைகளை கழுவுதல் என போலீசார் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போலீசார், தங்கள் அடையாள அட்டைகளை வைத்திருப்பதும் அவசியம்.200 மீட்டர் சுற்றளவில் கட்சி சின்னம், கொடிகள் இருப்பின் வி.ஏ.ஓ.,தேர்தல் அலுவலருக்குத் தெரியப்படுத்தி, இவற்றை அகற்ற நடவடிக்கைஎடுக்க வேண்டும். 200 மீ., எல்லைக்கோட்டிற்குள் வாகனங்களையும் அனுமதிக்கக்கூடாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X