திருப்பூர்:திருப்பூரில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள்; நிட்டிங், டையிங் என பல்வேறுவகை ஜாப்ஒர்க் நிறுவனங்கள், வணிக கடைகள் அதிகளவில் இயங்குகின்றன; பல லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர்.தொழில் நிறுவனங்கள், கடைகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளில், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என, தொழிலாளர் துறை அறிவித்துள்ளது; விதிமுறையை மீறி, தேர்தல் நாளான இன்று இயங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிப்பதற்காக, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது; 97897 23235, 98942 57543, 90921 95954, 99442 58037 என்கிற எண்களில் அழைத்து, புகார் தெரிவிக்கலாம்.மளிகை கடைகள் உஷார்தேர்தல் கமிஷனின் உத்தரவை செயல்படுத்தும் வகையில், திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள சில கடைகள், நேற்றே, தேர்தல் விடுப்பு அறிவிப்பு பலகை வைத்துவிட்டன. வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை, நேற்றே வாங்கிச் சென்றுவிட்டனர்; இதனால், கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE