திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடத்த, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், இரவு, பகலாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில், 1,108 மையங்களில், 3,343 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நிர்வாக வசதிக்காக, ஓட்டுச்சாவடிகள், 297 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.மண்டல தேர்தல் அலுவலர், உதவி அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் என, 950 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்; ஓட்டுச்சாவடிகளை சாவடிகளுக்கு கொண்டு செல்வது, ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்துச்சென்று ஒப்படைப்பது, இவர்களது பொறுப்பு.பதட்டமானவைஎட்டு தொகுதிகளில், காங்கயம், தாராபுரம் மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளில், மிக பதட்டமான சாவடிகள் தலா ஒரு இடங்களில் உள்ளன. மற்ற எட்டு தொகுதிகளில், 121 மையங்களில், 549 பதட்டமான சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறது.மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், 50 சதவீத சாவடிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. அதன்படி, பதட்டமான சாவடிகள் உட்பட, 50 சதவீத சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு, 1,672 சாவடிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை, மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் மற்றும் தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, மாவட்டத்தில், 1,100 போலீசார், ஓட்டுச்சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு, தபால் ஓட்டு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், துணை ராணுவப்படை வீரர்களும் பதட்டமான சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிக்கு'வீல் சேர்' ஏற்பாடுமாவட்டத்தில், மாற்றுத்திறனாளி வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து, 'வீல் சேர்' வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக, அதே பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில், 1,028 ஓட்டுச்சாவடிகளில் 'வீல் சேர்' வசதி செய்யப்பட்டுள்ளது.ஜனநாயக கடமைகலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள், கட்டாயம் முக கவசம் அணிந்து சென்று, தவறாமல் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். வரிசையில் நின்றாலும், சமூக இடைவெளியுடன் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.தகுதியான வாக்காளர், ஓட்டளிக்காமல் இருக்க கூடாது. வாக்காளர் அட்டை இல்லாதவர்கள், 11 வகையான மற்ற ஆவ ணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துச்சென்று ஓட்டளிக்கலாம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE