பொது செய்தி

தமிழ்நாடு

'மின் தடையா... 'நோ, சான்ஸ்' உயரதிகாரி திட்டவட்டம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:இன்று மின்தடைக்கு வாய்ப்பில்லை என, மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் கூறியதாவது:ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், போர்மேன் பொறுப்பாளராக நியமித்துள்ளோம். மின் தடை, மின்வினியோக குளறுபடி என, புகார் இருந்தால் உடனடியாக மின்வாரியத்தை தொடர்புகொள்ள, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் மொபைல் எண்கள்

திருப்பூர்:இன்று மின்தடைக்கு வாய்ப்பில்லை என, மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் கூறியதாவது:ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், போர்மேன் பொறுப்பாளராக நியமித்துள்ளோம். மின் தடை, மின்வினியோக குளறுபடி என, புகார் இருந்தால் உடனடியாக மின்வாரியத்தை தொடர்புகொள்ள, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.தகவல் வந்தவுடன், அப்பகுதியில் உள்ள பணியாளர்கள், பழுதை உடனடியாக சரிசெய்வர். டிரான்ஸ்பார்மர்களில் ஏதேனும் பழுது அல்லது சேதம் ஏற்பட்டால், மின்வினியோகம் தடைபடும் பட்சத்தில், அதற்காக இரண்டு லாரிகளில், மொபைல் டிரான்ஸ்பார்மர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உடனடியாக பழுதுபட்டதை மாற்றி அமைக்கப்படும். மரக்கிளைகள், மின்கம்பிகள் மீது விழுந்து, மின்தடை ஏற்படாத பட்சத்தில், அனைத்து பகுதிகளிலும் அவ்வாறான இடங்களில், மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி, ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் ஆய்வு நடத்தி, டிரான்ஸ்பார்மர்களில் இருந்த பலவீனமான ப்யூஸ் கேரியர்கள் மாற்றப்பட்டு, புதியவை மாற்றப்பட்டுள்ளது. மின்தடையின்றி மக்கள் ஓட்டு போட மின்வாரியம் தரப்பில், அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X