திருப்பூர்:சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. காலை, 7:00 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது.பூத் சிலிப் கிடைக் காதோர், மிக எளிதாக, தங்கள் ஓட்டுச் சாவடி மைய விவரங் களை தெரிந்து கொள்ளமுடியும். https://electralsearch.in/ என்கிற இணையதளத்துக்குள் செல்லவேண்டும்.'ஷர்ச் பை டீட்டைல்' என்கிற பிரிவில், பெயர், வயது, பாலினம், மாநிலம்; மாவட்டம், தொகுதி விவரங்களை பதிவு செய்யலாம்; அல்லது,'ஷர்ச் பை எபிக் நம்பர்' என்கிற பிரிவை தேர்ந்தெடுத்து, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எபிக் நம்பரை மட்டும் பதிவு செய்தால் போதும்; ஓட்டுச்சாவடி மைய முழு விவரங்கள் அடங்கிய டிஜிட்டல் சிலிப்கிடைத்துவிடும்.மாநிலம்; சட்டசபை தொகுதி; வாக்காளர் பெயர், எபிக் நம்பர்; ஓட்டுச்சாவடி எண் (பாகம் எண்); வரிசை எண்; தேர்தல் நாள்; ஓட்டுச்சாவடி மைய அமைவிட முழு விவரங்களும் அதில் இடம்பெற்றிருக்கும்.இதனை, குறித்து வைத்துக்கொண்டு, ஓட்டுச்சாவடியை கண்டறிந்து, ஜனநாயக கடமை ஆற்றலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE