ஓட்டுச்சாவடி கண்டறிவது சுலபம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி கண்டறிவது சுலபம் 

Added : ஏப் 06, 2021
Share
திருப்பூர்:சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. காலை, 7:00 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது.பூத் சிலிப் கிடைக் காதோர், மிக எளிதாக, தங்கள் ஓட்டுச் சாவடி மைய விவரங் களை தெரிந்து கொள்ளமுடியும். https://electralsearch.in/ என்கிற இணையதளத்துக்குள் செல்லவேண்டும்.'ஷர்ச் பை டீட்டைல்' என்கிற பிரிவில், பெயர், வயது, பாலினம், மாநிலம்; மாவட்டம், தொகுதி விவரங்களை பதிவு செய்யலாம்; அல்லது,'ஷர்ச் பை எபிக்

திருப்பூர்:சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. காலை, 7:00 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது.பூத் சிலிப் கிடைக் காதோர், மிக எளிதாக, தங்கள் ஓட்டுச் சாவடி மைய விவரங் களை தெரிந்து கொள்ளமுடியும். https://electralsearch.in/ என்கிற இணையதளத்துக்குள் செல்லவேண்டும்.'ஷர்ச் பை டீட்டைல்' என்கிற பிரிவில், பெயர், வயது, பாலினம், மாநிலம்; மாவட்டம், தொகுதி விவரங்களை பதிவு செய்யலாம்; அல்லது,'ஷர்ச் பை எபிக் நம்பர்' என்கிற பிரிவை தேர்ந்தெடுத்து, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எபிக் நம்பரை மட்டும் பதிவு செய்தால் போதும்; ஓட்டுச்சாவடி மைய முழு விவரங்கள் அடங்கிய டிஜிட்டல் சிலிப்கிடைத்துவிடும்.மாநிலம்; சட்டசபை தொகுதி; வாக்காளர் பெயர், எபிக் நம்பர்; ஓட்டுச்சாவடி எண் (பாகம் எண்); வரிசை எண்; தேர்தல் நாள்; ஓட்டுச்சாவடி மைய அமைவிட முழு விவரங்களும் அதில் இடம்பெற்றிருக்கும்.இதனை, குறித்து வைத்துக்கொண்டு, ஓட்டுச்சாவடியை கண்டறிந்து, ஜனநாயக கடமை ஆற்றலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X