முக கவசமின்றி வியாபாரிகள் சந்தையில் தொற்று அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசமின்றி வியாபாரிகள் சந்தையில் தொற்று அபாயம்

Added : ஏப் 06, 2021
Share
திருப்பூர்:மாட்டு சந்தையில், முக கவசம் இன்றி, வெளி மாநிலத்தவர் மற்றும் விவசாயிகள் பங்கேற்பதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திங்கள்கிழமை தோறும், தென்னம்பாளையத்தில் மாட்டுச்சந்தை நடைபெறும். கேரளா, ஆந்திரா, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் வந்து செல்வர்.உள்ளூரில் இருந்து விவசாயிகள் பங்கேற்பர். ஆயிரம் முதல், ஆயிரத்து

திருப்பூர்:மாட்டு சந்தையில், முக கவசம் இன்றி, வெளி மாநிலத்தவர் மற்றும் விவசாயிகள் பங்கேற்பதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திங்கள்கிழமை தோறும், தென்னம்பாளையத்தில் மாட்டுச்சந்தை நடைபெறும். கேரளா, ஆந்திரா, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் வந்து செல்வர்.உள்ளூரில் இருந்து விவசாயிகள் பங்கேற்பர். ஆயிரம் முதல், ஆயிரத்து 200 மாடுகள் விற்பனைக்கு வரும். மதியம், 1:00 முதல், 5:00 மணி வரை நடைபெறும் சந்தையில் 65 ஆயிரம் பேர் வரை பங்கேற்பர்.மாட்டுச்சந்தைக்கு முககவசம் அணிந்து யாரும் வருவதில்லை. வெளிமாநிலத்திருந்து வருவோரும், உள்ளூர் விவசாயிகள் அலட்சியமாக முககவசம் இல்லாமல் பங்கேற்கின்றனர். கேரளா, ஆந்திராவில் இருந்து வரும் வியாபாரிகளும் முககவசம் அணிவதில்லை.தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், முககவசம் அணியாமல் வியாபாரிகள், கால்நடை வளர்ப்பாளர் அலட்சியமாக பங்கேற்பது பலரை பீதியடைய செய்துள்ளது.நேற்று சந்தைக்கு ஆயிரம் மாடுகள் வந்தது. கன்றுகுட்டி, 5 ஆயிரம் ரூபாய் முதல், முதல்ரக மாடுகள், 27 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. 300 எருமைகள் விற்பனைக்கு வந்தது. சந்தையில் நேற்று ஒரே நாளில், 1.40 கோடிக்கு விற்பனைக்கு நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X