பல்லடம்:பல்லடம் அருகே, வாக்காளர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், வாழை கம்பம், தோரணம் கட்டி ஓட்டுச்சாவடி அலங்கரிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த எ. வடுகபாளையம் கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடி எண்: 389 உள்ளது. இங்கு, 333 ஆண்கள், 343 பெண்கள் என 676 பேர் ஓட்டளிக்க உள்ளனர். ஓட்டுப்பதிவு இன்று நடைபெற உள்ள சூழலில் வாக்காளர்களை வரவேற்கும் விதமாக, ஓட்டுச்சாவடி மையத்துக்கு வாழை கம்பம், கட்டி, வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.இது குறித்து வடுகபாளையம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''ஓட்டளிக்க வரும் பொதுமக்கள் வெயிலில் நின்று சிரமப்படக்கூடாது என்பதற்காக பந்தல் அமைத்துள்ளோம். நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியாக தோரணம் கட்டி வண்ண காகிதங்களால் அலங்கரித்துள்ளோம். பல்லடத்தில் முன்மாதிரி ஓட்டுச்சாவடி இது இருக்கும் என நம்புகிறோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE