சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., வேட்பாளர் மாயம்? காங்கயத்தில் திடீர் பரபரப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:காங்கயம் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க., வேட்பாளர் திடீரென மாயமானதாக தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கயம் தொகுதியில், அ.ம.மு.க., சார்பில், வேட்பாளராக ரமேஷ் போட்டியிடுகிறார். காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது.நேற்றுமுன்தினம் இரவு, தேர்தல் பணிமனையிலிருந்து புறப்பட்ட வேட்பாளர், மீண்டும் கட்சியினர் பார்வையில்

திருப்பூர்:காங்கயம் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க., வேட்பாளர் திடீரென மாயமானதாக தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கயம் தொகுதியில், அ.ம.மு.க., சார்பில், வேட்பாளராக ரமேஷ் போட்டியிடுகிறார். காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது.நேற்றுமுன்தினம் இரவு, தேர்தல் பணிமனையிலிருந்து புறப்பட்ட வேட்பாளர், மீண்டும் கட்சியினர் பார்வையில் படவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இரண்டு நாட்களாக, வேட்பாளர் ரமேஷ், கட்சி நிர்வாகிகள் யாரையும் தொடர்புகொள்ளவில்லை. வேட்பாளர் திடீரென மாயமானது, அக்கட்சியினரை தளர்வடையச் செய்துள்ளது.காங்கயம் பகுதி அ.ம.மு.க., வினர் கூறுகையில், 'வேட்பாளர் ரமேஷ், தொகுதிக்கு அறிமுகமில்லாதவர். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டவர், மிக முக்கியமான தேர்தல் நாளில் மாயமாகிவிட்டார். எங்களை பொருத்தவரை, கட்சி தலைவர்தான் முக்கியம்; வேட்பாளரை பற்றி கவலையில்லை,' என்றனர்.இதுகுறித்து தெரிந்து கொள்ள, வேட்பாளர் ரமேைஷ மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, ''எனது மொபைல் எண் எப்போதும் சுவிட்ச் ஆப் செய்யப்படவில்லை. அப்படியிருந்தால், பேச முடியுங்களா? நான் தேர்தல் பணியில், காங்கயத்தில் தான் உள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X