கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் தியேட்டர்களுக்கு மீண்டும், 50 சதவீத இருக்கை முறை கொண்டு வரப்பட உள்ளது.
கொரோனாவின், 2வது அலை, தமிழகத்தில் அதிகரித்து வரும் வேளையில், ஓட்டுப்பதிவு முடிந்ததும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. ஏற்கனவே, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது தியேட்டர்களில், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே, அனுமதி வழங்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க, கர்நாடகாவில்உள்ள தியேட்டர்களில், 50 சதவீத இருக்கை முறை கொண்டு வரப்பட்டு விட்டது.தமிழகத்தில், ஜனவரியில் தான், தியேட்டர்களுக்கு, 100 சதவீத இருக்கைக்கு அனுமதி தரப்பட்டது. மாஸ்டர் தவிர, ஒன்றிரண்டு படங்கள் மட்டுமேலாபத்தை பார்த்த நிலையில், வரும், 9ம் தேதி, தனுஷ் நடித்த, கர்ணன் படம் வெளியாகிறது. சில தினங்களுக்கு முன், கார்த்தி நடித்த, சுல்தான் வெளியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE