சென்னை : தமிழகத்தில் நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 152 ரூபாய் குறைந்தது.
சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில், சில தினங்களாக ஆபரண தங்கம் விலை உயர்ந்து வந்தது. தமிழகத்தில் சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,277 ரூபாய்க்கும்; சவரன், 34 ஆயிரத்து, 216 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 69.70 ரூபாயாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைகளுக்கு விடுமுறை. இதனால், முந்தைய நாள் விலையிலேயே தங்கம், வெள்ளி விற்பனையாகின.நேற்று தங்கம் கிராமுக்கு, 19 ரூபாய் குறைந்து, 4,258 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 152 ரூபாய் சரிந்து, 34 ஆயிரத்து, 64 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 40 காசுகள் குறைந்து, 69.30 ரூபாய்க்கு விற்பனையானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE