தங்கம் விலை ரூ.152 குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை ரூ.152 குறைவு

Added : ஏப் 06, 2021
Share
சென்னை : தமிழகத்தில் நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 152 ரூபாய் குறைந்தது. சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில், சில தினங்களாக ஆபரண தங்கம் விலை உயர்ந்து வந்தது. தமிழகத்தில் சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,277 ரூபாய்க்கும்; சவரன், 34 ஆயிரத்து, 216 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 69.70 ரூபாயாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைகளுக்கு விடுமுறை. இதனால், முந்தைய

சென்னை : தமிழகத்தில் நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 152 ரூபாய் குறைந்தது.

சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில், சில தினங்களாக ஆபரண தங்கம் விலை உயர்ந்து வந்தது. தமிழகத்தில் சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,277 ரூபாய்க்கும்; சவரன், 34 ஆயிரத்து, 216 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 69.70 ரூபாயாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைகளுக்கு விடுமுறை. இதனால், முந்தைய நாள் விலையிலேயே தங்கம், வெள்ளி விற்பனையாகின.நேற்று தங்கம் கிராமுக்கு, 19 ரூபாய் குறைந்து, 4,258 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 152 ரூபாய் சரிந்து, 34 ஆயிரத்து, 64 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 40 காசுகள் குறைந்து, 69.30 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X