பொது செய்தி

தமிழ்நாடு

யானை வரும் ஓட்டுச்சாவடி வனத்துறை கண்காணிப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கூடலுார் : கூடலுார் தொகுதியில், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அமைந்த ஓட்டுச்சாவடிகளில், வன ஊழியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலுாரில் பதற்றமான, 49 ஓட்டு சாவடிகளில், உள்ளூர் போலீசாருடன், துப்பாக்கி ஏந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில்

கூடலுார் : கூடலுார் தொகுதியில், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அமைந்த ஓட்டுச்சாவடிகளில், வன ஊழியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுாரில் பதற்றமான, 49 ஓட்டு சாவடிகளில், உள்ளூர் போலீசாருடன், துப்பாக்கி ஏந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள, 20 ஓட்டுச்சாவடிகளில், வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். யானைகள் நடமாட்டம் உள்ள செலுக்காடி ஓட்டுச்சாவடியில், வனத்துறையினர் மற்றும் தேர்தல் அலுவலர்கள், ஆய்வு மேற்கொண்டனர்.கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் கூறுகையில், ''யானைகள் நடமாட்டத்தை, வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வனப்பகுதி அருகே உள்ள ஓட்டுச்சாவடிகளில், மக்கள் பாதுகாப்பாக ஓட்டு போடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அச்சமின்றி, வந்து செல்லலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X