பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு இயந்திரங்களை சுமந்து சென்ற 'ரஜினி, கமல், விஜய்'

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
போடி : தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டூர் மலை கிராமத்திற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ரஜினி, கமல், சரத்குமார், விஜய், அஜித் என்ற பெயரில் உள்ள ஐந்து கழுதைகள் மூலம், எடுத்து செல்லப்பட்டன. தேனி மாவட்டம், போடி ஒன்றியம், கொட்டகுடி மற்றும் அகமலை ஊராட்சிகளில், பல மலை கிராமங்கள் உள்ளன. போடியில் இருந்து இப்பகுதிகளுக்கு செல்ல, சாலை வசதி இல்லை. இதனால், குரங்கணியில்

போடி : தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டூர் மலை கிராமத்திற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ரஜினி, கமல், சரத்குமார், விஜய், அஜித் என்ற பெயரில் உள்ள ஐந்து கழுதைகள் மூலம், எடுத்து செல்லப்பட்டன.

தேனி மாவட்டம், போடி ஒன்றியம், கொட்டகுடி மற்றும் அகமலை ஊராட்சிகளில், பல மலை கிராமங்கள் உள்ளன. போடியில் இருந்து இப்பகுதிகளுக்கு செல்ல, சாலை வசதி இல்லை. இதனால், குரங்கணியில் இருந்து, 30 கி.மீ.,யில் உள்ள சென்ட்ரல் ஸ்டேஷனுக்கும், போடியில் இருந்து, 13 கி.மீ.,யில் உள்ள காரிப்பட்டிக்கும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு, குதிரைகள் மூலமாக, அதிகாரிகள் நேற்று எடுத்துச் சென்றனர். பெரியகுளம் அருகே உள்ள ஊரடி ஊத்துக்காடுக்கு, கண்ணக்கரை வழியாக, 8 கி.மீ., குதிரைகள் மூலமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன.

103 கி.மீ., துாரம் : இதேபோல, கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட டாப்- ஸ்டேஷன் மலைப்பகுதி, போடியில் இருந்து குரங்கணி வழியாக, 40 கி.மீ.,யில் உள்ளது. இங்கு, 153 ஓட்டுகள் மட்டுமே உள்ளன. குரங்கணியில் இருந்து டாப்- ஸ்டேஷன் செல்வதற்கு சாலை வசதி இல்லை.இதனால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, கேரளா மூணாறு வழியாக, 103 கி.மீ., துாரம் ஜீப்பில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். வாக்காளர்கள், அங்கு உள்ள வீரவேல் ஆரம்ப பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வேண்டும். இதுபோல, 148 வாக்காளர்கள் உள்ள கொழுக்கு மலை கிராமத்திற்கு போடியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் உள்ள கேரளா, சூரியநெல்லிக்கு சென்று, அங்கிருந்து, 10 கி.மீ.,க்கு குண்டும், குழியுமாக உள்ள சாலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

கழுதைகள் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது, வட்டுவனஹள்ளி பஞ்சாயத்து. இங்குள்ள, கோட்டூர் மலை கிராமத்தில், 345 வாக்காளர்கள் உள்ளனர். சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகளான நிலையிலும், கோட்டூருக்கு சாலை வசதி இல்லை.இதனால், இப்பகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பாலக்கோடு வழியாக, கோட்டூர் மலை அடிவாரத்திலுள்ள கன்சல்பேல் கிராமத்துக்கு நேற்று மாலை, 3:40 மணிக்கு லாரியில் வந்தன. பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 4:15 மணிக்கு, ரஜினி, கமல், சரத்குமார், விஜய், அஜித் என்ற பெயரில் உள்ள ஐந்து கழுதைகள் மூலம், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசாருடன், கோட்டூர் மலை கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்லப்பட்டன.தலைச்சுமைநாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் ஒன்றியம், போதைமலையில், கீழுர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழுரில், 902 வாக்காளர்கள்; கெடமலை சாவடியில், 322 வாக்காளர்கள் உள்ளனர். சாலை வசதி இல்லாததால், ஓட்டுச் சாவடிகளுக்கு தேவையான பொருட்களை, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, 5 கி.மீ., துாரம் தலையில் சுமந்தே செல்கின்றனர்.

நேற்று காலை, மண்டல அலுவலர் விஜயகுமார் தலைமையில், 16 பேர் குழுவினர், ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்களுடன் நடந்து சென்றனர். மலைவாழ் மக்கள், நான்கு பேர் உதவியுடன் பொருட்களை தலைச்சுமையாக துாக்கி சென்றனர்.ஓட்டுப் பதிவு முடிந்தவுடன், மின்னணு இயந்திரங்களை, இரவே கீழே வந்து, ஓட்டு எண்ணும் மையத்தில் ஒப்படைத்த பின்தான் அதிகாரிகள் வீட்டிற்கு செல்ல முடியும். எந்த ஆண்டும் இல்லாமல், இந்தாண்டு சுகாதாரத் துறையினர் இருவர், ஓட்டுச் சாவடிக்கு செல்கின்றனர். அவர்கள், கொரோனா பாதுகாப்பு உடை, முக கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வதால், கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் பயணம் : நீலகிரி மாவட்டம், குன்னுார் தொகுதியில், 129 ஓட்டு மையங்களுக்கு, ஓட்டு இயந்திரங்கள் நேற்று எடுத்து செல்லப்பட்டன. இதில், கோவை மாவட்டம், சிறுமுகை வழியாக, முதல் வாகனம் தெங்குமரஹாடாவுக்கு சென்றது.மொத்தம், 1,711 வாக்காளர்கள் கொண்ட, மூன்று ஓட்டுப்பதிவு மையங்களுக்கு, ஓட்டு இயந்திரங்கள் மற்றும் கொரோனா, 'கிட்' கொண்டு செல்லப்பட்டது. இப்பகுதிக்கு, ஆண்டுதோறும் பரிசல்களில், இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் நிலையில், நடப்பாண்டு கல்லாம்பாளையம், தெங்குமரஹாடா ஆறுகளில், வாகனங்களை இறக்கி, மெதுவாக ஓட்டிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkataraman k. - chennai,இந்தியா
06-ஏப்-202109:01:23 IST Report Abuse
venkataraman k. இருந்தாலும் கொஞ்சம் ஓவர்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X