பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்போட கட்டத்துல நிற்கணும்: சமூக விலகல் கடைபிடிக்க ஏற்பாடு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, நெ.10 முத்துார் ஓட்டுச் சாவடியில், வாக்காளர்கள் சமூக விலகலுடன் நின்று ஓட்டுப்பதிவு செய்வதற்காக, கட்டங்கள் வரையப்பட்டுள்ளன.கிணத்துக்கடவு தாலுகாவுக்குட்பட்ட பகுதியில், கிணத்துக்கடவு தொகுதிக்கு, 34 ஓட்டுச்சாவடிகளும், பொள்ளாச்சி தொகுதிக்கு, 95 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன.ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்வதற்கான அடிப்படை
 ஓட்டுப்போட கட்டத்துல நிற்கணும்: சமூக விலகல் கடைபிடிக்க ஏற்பாடு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, நெ.10 முத்துார் ஓட்டுச் சாவடியில், வாக்காளர்கள் சமூக விலகலுடன் நின்று ஓட்டுப்பதிவு செய்வதற்காக, கட்டங்கள் வரையப்பட்டுள்ளன.கிணத்துக்கடவு தாலுகாவுக்குட்பட்ட பகுதியில், கிணத்துக்கடவு தொகுதிக்கு, 34 ஓட்டுச்சாவடிகளும், பொள்ளாச்சி தொகுதிக்கு, 95 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன.ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்வதற்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சமூக விலகல் கட்டங்கள் வரையப்பட்டுள்ளது.வெயிலில் நிற்காமல் இருப்பதற்காக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. குடிதண்ணீர் மற்றும் முதியவர் மற்றும் வயதானவர்கள் வந்து செல்வதற்காக சாய்வுதளம் (ரேம்ப்) அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு செய்ய வரும் வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக விலகல் கட்டங்களில் நின்று, ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்பட நெ.10 முத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பந்தல் மற்றும் சமூக விலகல் கட்டங்கள் வரையும் பணி நேற்று நடந்தது. இதேபோன்று, அனைத்து ஓட்டுச்சாவடியிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X