சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடல்நலக்குறைவால் நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை : மருத்துவர்களின் ஆலோசனையை மீறி தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் கார்த்திக்கிற்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான நடிகர் கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்னும் பெயரில் கட்சி நடத்தி வருகிறார். சட்டசபை தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை. எனினும் அதிமுகவிற்கு ஆதரவு

சென்னை : மருத்துவர்களின் ஆலோசனையை மீறி தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் கார்த்திக்கிற்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



latest tamil news



பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான நடிகர் கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்னும் பெயரில் கட்சி நடத்தி வருகிறார். சட்டசபை தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை. எனினும் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக பிரசாரங்களில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். திடீரென உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின் உடல்நலம் சற்று தேறிய கார்த்திக், போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும், சூலூர் தொகுதி வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்து ஓட்டு கேட்டார்.


latest tamil news



சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஞாயிற்று கிழமையுடன் முடிந்தநிலையில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சு திணறலால் நேற்று மாலை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு இருந்த போதிலும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டதால் மீண்டும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
07-ஏப்-202103:52:54 IST Report Abuse
rajesh இந்த காமெடி பீசு அரசியல்வாதியா????சார் எத்தனை தேர்தல்ல போட்டிபோட்டு ஜெயிச்சாரு.... இவன் எல்லாம் ஒரு ஆளு
Rate this:
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
06-ஏப்-202113:42:46 IST Report Abuse
muthu Rajendran இவர் எப்போதுமே தேர்தல் நடக்கும் போது வருவார் இரெண்டு இடத்தில் பிரச்சாரம் செய்வார் உடல்நிலை சரியில்லை என ஒதுங்கிவிடுவார் இதைத்தான் கடந்த இரெண்டு மூன்று தேர்தலிகளில் செய்துள்ளார் காமெடி பீஸ்
Rate this:
Cancel
shan - jammu and kashmir,இந்தியா
06-ஏப்-202112:09:49 IST Report Abuse
shan He has not danced or done irregularities or rapes corruption than Karuna, stalin family members
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X