பொது செய்தி

தமிழ்நாடு

மனநல காப்பகத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
ஈரோடு : தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ளவர்கள், மாதிரி ஓட்டுப்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினர். ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் கூறியதாவது:பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, தாளவாடி மலைப்பகுதி, நசரத் இல்ல மனநல காப்பகத்தில், 60 பயனாளிகளை ஓட்டு போட, விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். முறையாக விண்ணப்பித்து, அவர்களை வாக்காளராக

ஈரோடு : தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ளவர்கள், மாதிரி ஓட்டுப்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினர்.

ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் கூறியதாவது:பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, தாளவாடி மலைப்பகுதி, நசரத் இல்ல மனநல காப்பகத்தில், 60 பயனாளிகளை ஓட்டு போட, விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். முறையாக விண்ணப்பித்து, அவர்களை வாக்காளராக சேர்த்து, வாக்காளர் அடையாள அட்டை வழங்கினோம். ஓட்டுச்சாவடி போல் வரிசையாக நிறுத்தி, கொரோனா சமூக இடைவெளி கடைப்பிடித்து, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்ய வைத்தோம்.

பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுப் போட வைத்தோம்.பதிவிட்ட வேட்பாளரின் சின்ன விபரம், விவிபேடில் வருகிறதா என பார்க்க வைத்து, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தினோம். அங்குள்ள, 60 பேரில், 34 பேர் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து, உற்சாகம் அடைந்தனர். இவர்களை தேர்தல் நாளிலும், ஓட்டுப் போட வைக்க ஏற்பாடு செய்து உள்ளோம். தேர்தல் விதிகளை கவனமாக கேட்டு, ஆர்வத்துடன் ஒத்துழைப்பு தந்தனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X