பொது செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரியில் 144 தடை தேர்தல் அதிகாரி விளக்கம் 

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''புதுச்சேரியில் நண்பர்கள், குடும்பத்தினருடன் சேர்ந்து சென்று ஓட்டளிக்க, எந்த தடையும் இல்லை,'' என மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பூர்வா கார்க் விளக்கம் அளித்துள்ளார். சட்டசபை தேர்தலையொட்டி, கடந்த 1ம் தேதி, புதுச்சேரி மாவட்டத்தில், 144 தடை உத்தரவை கலெக்டர் பூர்வா கார்க் பிறப்பித்தார். அரசியல் கட்சியினர் கோஷமிட்டு செல்லவும், கூட்டமாக கூடவும், ஐந்து

புதுச்சேரி : ''புதுச்சேரியில் நண்பர்கள், குடும்பத்தினருடன் சேர்ந்து சென்று ஓட்டளிக்க, எந்த தடையும் இல்லை,'' என மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பூர்வா கார்க் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டசபை தேர்தலையொட்டி, கடந்த 1ம் தேதி, புதுச்சேரி மாவட்டத்தில், 144 தடை உத்தரவை கலெக்டர் பூர்வா கார்க் பிறப்பித்தார். அரசியல் கட்சியினர் கோஷமிட்டு செல்லவும், கூட்டமாக கூடவும், ஐந்து நபர்களுக்கு மேல் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக, புதுச்சேரி மா.கம்யூ., கட்சி செயலர் ராஜாங்கம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 144 தடை உத்தரவுக்கு விளக்கமளிக்க கோர்ட் உத்தரவிட்டது.கலெக்டர் பூர்வா கார்க் அளித்துள்ள விளக்கம்: தடை உத்தரவு தொடர்பாக விளக்கம் தர, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கூட்டமாக செல்ல தடை விதித்தது தவிர, பொது மக்களுக்கு எந்த தடையும் கிடையாது.

பொதுமக்கள் வர்த்தகம், வியாபாரம் செய்யவோ, வேலைக்கு செல்லவோ, குடும்ப விழாக்கள் நடத்தவோ எந்த தடையும் இல்லை. ஜனநாயக திருவிழாவை, சரியான மனப்பான்மையுடன் கொண்டாட நண்பர்கள், குடும்பத்தினருடன் சேர்ந்து ஓட்டளிக்க செல்வதை தடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X