தி.மு.க., நேரு மீது 4 பிரிவுகளில் வழக்கு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நேரு மீது 4 பிரிவுகளில் வழக்கு

Added : ஏப் 06, 2021
Share
திருச்சி : வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, கட்சியினருடன் பேசிய வீடியோ அடிப்படையில், அவர் மீது, நான்கு பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் நேரு, திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க., முதன்மைச் செயலரான இவர், இரு நாட்களுக்கு முன், முசிறி வேட்பாளர் தியாகராஜனை, முசிறி தேர்தல்

திருச்சி : வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, கட்சியினருடன் பேசிய வீடியோ அடிப்படையில், அவர் மீது, நான்கு பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் நேரு, திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க., முதன்மைச் செயலரான இவர், இரு நாட்களுக்கு முன், முசிறி வேட்பாளர் தியாகராஜனை, முசிறி தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.அப்போது, 'ஓட்டுக்கு 200 ரூபாய் கொடு போதும், அ.தி.மு.க.,காரன், 500 ரூபாய் கொடுத்தால், அது மக்களிடம் போய் சேராது' என்றதுடன், ஆபாச வார்த்தைகளால் பேசி, கட்சிக்காரர் ஒருவரை, 'தவறாக ஏதும் நடந்தால் கொலை செய்து விடுவேன்' என்றும் ஜாலிமூடில் பேசினார்.இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

இது, தி.மு.க.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, முசிறி தேர்தல் அலுவலர் பத்மநாபன், முசிறி போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, நேரு மீது, பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், தேர்தலில் பரிசுப்பொருள் வழங்க துாண்டுதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க துாண்டுதல், கொலை மிரட்டல் என, நான்கு பிரிவுகளில் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X