புதுடில்லி : ஏர் இந்தியாவை, 'டாடா' நிறுவனம் வாங்கும் முயற்சி கைகூடி வருவதாகவும்; சில விஷயங்களில் அரசுக்கும், டாடா நிறுவனத்துக்கும் இருந்த வேறுபாடுகள் களையப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, அரசுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா குழுமம் வாங்குவது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம்.இருப்பினும், சில விஷயங்களில் மாறுபட்ட கருத்து, இரு தரப்புக்கும் இடையே இருந்தது. குறிப்பாக, 'பென்சன்' பொறுப்பு, 'ரியல் எஸ்டேட்' சொத்துக்கள், கடன் ஆகியவை குறித்து கருத்து வேறுபாடுகள்
![]()
|
இருக்கின்றன.இதுகுறித்த, இறுதிக் கட்ட பேச்சுகள் இருதரப்புக்கும் இடையே நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்க இருக்கிறது என்பது குறித்த தகவலை, டாடா நிறுவனம் அரசுக்கு சமர்ப்பித்துவிடும் என எதிர்பார்க்கப்
படுகிறது.பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள், வரும் ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அவர்களது பென்சன் குறித்த விஷயத்தில், அரசு பொறுப்பேற்க வேண்டும் என விரும்புகின்றனர். இதேபோல், ஊழியர் குடியிருப்பு மற்றும் நிலம் உள்ளிட்டவை யார் பொறுப்பில் இருக்கும் என்பதும் முடிவாக வேண்டியிருக்கிறது.
டாடா இந்த சொத்துக்களை தன் வசம் வைத்துக்கொள்ள விரும்புகிறது.கடனை பொறுத்தவரை, குறிப்பிட்ட ஒரு தொகையை மட்டும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு, மீதியை டாடா வசம் ஒப்படைக்க அரசு விரும்புகிறது. இவை குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்பட்டுவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE