சம்பவம் செய்தி

தமிழ்நாடு

120 சவரன் நகை, 47 லட்சம் ரூபாய் திருட்டு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில், பனியன் பிரின்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டில், 120 சவரன் நகை, 47 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள், திருடி சென்றனர். திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், மும்மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சபியுல்லா, 53; பனியன் பிரின்டிங் நிறுவனம் நடத்துகிறார். அமெச்சூர் கபடி கழக, மாநில பொது செயலராகவும் உள்ளார். கடந்த, 1ம் தேதி சபியுல்லா, குடும்பத்துடன் ஊட்டி சென்றார்.

திருப்பூர் : திருப்பூரில், பனியன் பிரின்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டில், 120 சவரன் நகை, 47 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள், திருடி சென்றனர்.

திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், மும்மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சபியுல்லா, 53; பனியன் பிரின்டிங் நிறுவனம் நடத்துகிறார். அமெச்சூர் கபடி கழக, மாநில பொது செயலராகவும் உள்ளார். கடந்த, 1ம் தேதி சபியுல்லா, குடும்பத்துடன் ஊட்டி சென்றார். நேற்று காலை வீட்டின், முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த உறவினர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் பொருட்கள் சிதறி கிடந்தன. இது குறித்து சபியுல்லாவுக்கு தகவல் அளித்தார்.வீரபாண்டி போலீசார் விசாரணையில், இரண்டு பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிந்தது.

போலீசார் கூறியதாவது:'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். 4ம் தேதி அதிகாலை, 1:55 மணிக்கு பைக்கில் வந்த இருவர் வீட்டை நோட்டமிட்டு, சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று, வீட்டு வாசலில் இருந்த, 'லைட்'டை ஆப் செய்துள்ளனர். இருவரும் அடையாளம் தெரியாமல் இருக்க, முகம் முழுதும் வெள்ளை துணியால் சுற்றி, 'ஹெல்மெட்' அணிந்து இருந்தனர். நகை, பணத்தை திருடி விட்டு, அதிகாலை, 2:30 மணிக்கு வெளியே சென்றனர். விசாரணையில், இரண்டு அறைகளில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, 120 சவரன் நகை, 47 லட்சம் ரூபாயை இருவரும் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கொள்ளையரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X