சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3,000 மது பாட்டில்கள் பறிமுதல்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சேலம் : சேலத்தில், வாக்காளர்களை கவனிப்பதற்காக வைத்திருந்த, 2,854 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இன்று ஓட்டுப்பதிவை முன்னிட்டு, ஏப்., 4 முதல், மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடுமுறை நாட்களில், விற்பனை செய்வதற்காக, வியாபாரிகளும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினரும், வாக்காளர்களை கவனிக்க, மது பாட்டில்களை

சேலம் : சேலத்தில், வாக்காளர்களை கவனிப்பதற்காக வைத்திருந்த, 2,854 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இன்று ஓட்டுப்பதிவை முன்னிட்டு, ஏப்., 4 முதல், மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடுமுறை நாட்களில், விற்பனை செய்வதற்காக, வியாபாரிகளும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினரும், வாக்காளர்களை கவனிக்க, மது பாட்டில்களை வாங்கி குவித்தனர்.சேலம் மாவட்டத்தில் உள்ள, 220 டாஸ்மாக் கடைகளில், வழக்கமான நாட்களில், 5.5 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கும். கடந்த, 3ம் தேதி, 13 கோடியாக விற்பனையாக உயர்ந்தது.

நேற்று முன்தினம் இரவு, சேலம் பெரமனுார், கோவிந்தகவுண்டர் தோட்டத்தை சேர்ந்த மாதேஷ், 55, இவரது மகன் கண்ணன், 42, ஆகியோரின் வீடுகளில், போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாக்கு மூட்டைகள், அட்டை பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த, 2,174 மது பாட்டில்கள், அவற்றை வினியோகம் செய்ய பயன்படுத்தப்பட்ட, 'ஸ்கூட்டி பெப்' இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தந்தை, மகனை கைது செய்தனர்.l சேலம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன், 45, அ.தி.மு.க., வார்டு அவைத் தலைவராக உள்ளார். இவர், வாக்காளர்களுக்கு பணம், மது பாட்டில்கள் வழங்குவதாக, பறக்கும் படை அதிகாரி புவனேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 1.06 லட்சம் ரூபாய், 100 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மாதேஸ்வரனை கைது செய்தனர்.சேலத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும், மொத்தம், 2,854 மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X