பொது செய்தி

தமிழ்நாடு

இல்லாத ஊரில் 120 ஓட்டு தனி ஓட்டுச்சாவடி அமைப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தொகுதியில், வடசித்துார் ஊராட்சிக்கு உட்பட்ட சிறு கிராமம் குரும்பபாளையம். வறட்சி காரணமாக, கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் வாழ்வாதாரம் தேடி, சூலுார், சுந்தராபுரம், மாச்சம்பாளையம் மற்றும் பல்லடம் பகுதிக்கு சென்று விட்டனர்.இதனால், கிராமத்தில் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் அழிந்து, முட்புதராக உள்ளன. கிராமத்தில் வசித்த

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தொகுதியில், வடசித்துார் ஊராட்சிக்கு உட்பட்ட சிறு கிராமம் குரும்பபாளையம். வறட்சி காரணமாக, கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் வாழ்வாதாரம் தேடி, சூலுார், சுந்தராபுரம், மாச்சம்பாளையம் மற்றும் பல்லடம் பகுதிக்கு சென்று விட்டனர்.இதனால், கிராமத்தில் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் அழிந்து, முட்புதராக உள்ளன. கிராமத்தில் வசித்த சிலர், அருகில் உள்ள தோட்டத்து வீடுகளில் குடியேறியுள்ளனர்.இப்பகுதி வாக்காளர்கள், வடசித்துார் ஊராட்சியின் முதல் வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று நடக்கவுள்ள தேர்தலில், 120 பேர் ஓட்டுப்பதிவு செய்கின்றனர்.சமீபத்தில், வடசித்துாரை சேர்ந்த அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் தோட்டத்து வீடுகளில் வசிக்கும் வாக்காளர்களை சந்தித்து, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவும் திரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X